தொழில்கள்
65
4. வெள்ளை வெளுவெளுத்து வேலிமேலே
போட்டுலர்த்திச்
சோமன் துவைத்துவச்ச துரைமகனார் வாறாரிங்கே.
சாத்தமுத்துப் பெரும்பறையா,
சாறளஞ்ச மாரழகா
உருண்டை முழியழகா,
உருமாலைக் கட்டழகா
நீ செத்துப் போனீன்னா
அவனி முழுதும்நீ அளந்த மரக்கால்
ஆர் அளக்கப் போறா?
✽
நாங்க நாப்பது ரூவாய்ச் சாயச் சேலை
வாங்கிக் கட்டுவோம்;
நாங்க நாற்காலி மேல்ஏறி
நாத்து நடுவோம்.
தன்னானே தன்னானே தான தன்னன்னா தனதான
சின்னாயி, சின்னாயீ, நான், கப்பலுக்கே போய் வர்றேன்;
கப்பலுன்னா முப்பயணம்; காத்துன்னாக் கடுங்காத்து;
அக்காடி அக்காடிநான், கப்பலுக்குப் போய் வாறேன்.
✽✽✽
ரெண்டுநாளு நூத்த நூலைப் பாரடா தம்பீ,
என், நாத்தனா மவனே, என் நாடக சாலை,
ரெண்டாங் கணக்கெடுத்துநீ பாரடா தம்பீ,
என், நாத்தனா மவனே, என் நாடகசாலை.
களை வெட்டும் பாட்டு
அத்தைமகன் இறைக்கும் தண்ணி
அத்தனையும் பச்சைத் தண்ணி
ஏலேலோ பச்சைத் தண்ணி;
5