உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

νi

பல ஆண்டுகள் போனால் இவை அடியோடு மறந்து போகும். ஆதலால் இவற்றை இந்தமட்டும் வெளியிட்டு வைக்கலாம் என்று எண்ணினேன்.

பாமரரும் புலவர்களும் இவற்றில் இன்பம் காணலாம். காட்டுப் பூக்களைப் போலவும், மலையருவியைப் போலவும், நாகரிகம் தெரியாமல் இயற்கையோடு ஒன்றி வாழும் வஞ்சகமற்ற மக்களின் பேச்சைப் போலவும், குழந்தைகள் தொடர்பின்றிப் பேசுவதைப் போலவும் உள்ளவை இவை.

இவற்றைப் படித்துச் சுவைகாணும் அன்பர்களுக்கும் இவற்றை அங்கங்கே போன இடங்களில் சொன்னவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘காந்தமலை’, மந்தைவெளி    }

கி.வா. ஜகந்நாதன்

10—05—1983