இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுண்ணாம்பு இடிக்கிற பாட்டு
79
அடிச்சால் அடிபொறுப்பேன்; அண்டையிலே வீற்றிருப்பேன்,
ஏலேலமடி ஏலம்
பிடிச்சாப் பிடிபொறுப்பேன்; பிரியமுடன் பேசியிருப்பேன்,
ஏலேலமடி ஏலம்
என்னா நினைக்காதேடா, எதிரிகடன் வாங்காதேடா,
ஏலேலமடி ஏலம்
சிங்கப்பூருக் கப்பல்வந்தால், என்னைச், சீக்கிரமாக் கொண்டுபோகும்
ஏலேலமடி ஏலம்
ஓடுகிற ஓட்டத்திலே ஒத்தைப்பனை ஓரத்திலே,
ஏலேலமடி ஏலம்
எட்டிஒரு முத்தம்குடு, ஏறிக்கிறேன் வண்டிமேலே,
ஏலேலமடி ஏலம்.