பக்கம்:ஏலக்காய்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

வேண்டும். ஆனால், பலத்த மழை பெய்யக் கூடிய ஜூன்-ஆகஸ்ட் காலப்பிரிவில் நடவுக் காரியத்தைத் தொடவும் கூடாது; தொடரவும் கூடாது.

முதல் நிலையில் நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு பிறகு இரண்டாம் நிலையிலும் நாற்றங்காலில் ஆளாக்கப்பட்ட ஏலக்காயின் நாற்றுக்களை முதன்மையான சாகுபடி நிலங்களில் நடவு செய்கையில், மரமுளைகளின் துணைத் தாங்கலோடு நிமிர்ந்த அமைப்பு நிலையில் ஊன்றி நடுவதில் விவசாயிகள் அக்கறையோடு செயற்படவேண்டும்.


செடிகளின் பராமரிப்பு!

நடவு முடிகிறது.

இப்போது, நடப்பட்ட வளர்ச்சி அடைந்த நாற்றுக் களை, அதாவது இளஞ்செடிகளைப் பேணிக் காக்கும் வகையிலும், அவற்றின் வேர்களைப் பராமரிக்கும் வழியிலும் அச்செடிகளின் அடிப்பாகங்களிலே வைக்கோல், சருகு, இலை தழைக்கூளங்களை ஈரமாக்கிப் பரப்பிவிட வேண்டும். அப்போதுதான், வறட்சியின் பாதிப்புக்கு இலக்காகாமலும், மழை வீச்சுக்கு ஆளாகாமலும் மண் வளம் சமன்நிலை எய்திடவும் இயலும். மண்ணில் ஈரம் அடிமட்டத்தில் நிலைப்பதில் உரங்களின் பணி கூடுதல்தான். மண்ணில் ஈரம் நிலவினால்தானே, செடிகளின் வேர்கள் நன்கு உருவாகி பலம் அடைய முடியும்!

நாட்கள் ஓடுகின்றன.

நடவு கழிந்து, ஏலக்காய்க்கான கலவை உரங்களைப் பயன்படுத்துவது, வறட்சி நிலையைத் தாங்கிச் சமாளிக்க நீர் பாய்ச்சுவது, சீரான நிழல் அமைப்பது போன்ற செயல்கள் தொடரும். செடிகளைச் சுற்றிலும் 30 செ. மீ. இடைவெளிவிட்டு, அப்பகுதிகளைக் கொத்திக் கிளறிவிட்டு, செடிகளின் அடிப்புறங்களில் ஏலக்காய்க் கலவை உரங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/36&oldid=505940" இருந்து மீள்விக்கப்பட்டது