உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏலக்காய்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏலக்காய் வாரியம்!


இந்திய அரசியல் சாசனத்தின் ஆதரவோடு 1955 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஏலக்காய்ச் சட்டத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் ஏலக்காய் வாரியம் (The Cardamom Board) நிறுவப்பட்டது. 'ஏலட்டேரியா கார்டமம்' எனப்படும் சிறிய ஏலக்காய் ரகத்தின் முழு அளவிலான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான எல்லாவகையான பொறுப்புக்களையும் மேற்கொண்டு வாரியம் இயங்கியும் இயக்கப்பட்டும் வருகிறது.

ஏலக்காய் வாரியத்தின் நேரடி நிருவாகத்தின் கீழ் தற்போது 'அமோமம் கார்டமோம்' எனப்படும் பெரிய ஏலக்காய் வகையின் மேன்மையும் மேம்பாடும் 14.7.1979 முதல் சீரடைந்து வருகின்றன!


வாரியத்தின் நடைமுறைச் செயற்பணிகள்!

ஏலக்காய் வாரியம் நடைமுறைப் படுத்தி வரும் வளர்ச்சி மற்றும் செயற்பணித் திட்டங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தொடர்கின்றன; தொடர் சேர்க்கின்றன.

ஏலக்காய் விவசாயிகளுக்கு மத்தியில் கூட்டுறவு முயற்சிகளை முன்னேற்றம் அடையச் செய்வது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏலக்காய்.pdf/69&oldid=506023" இலிருந்து மீள்விக்கப்பட்டது