பக்கம்:ஏழாவது வாசல்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46ஏழாவது வாசல்
 

செல்லும் போது என்னைப் பார்த்தான். “என்ன சுவாமி நலமா?” என்று அவன் கேட்டான்.

அவன் கேட்ட குரலில் முந்திய பணிவும் அடக்கமும் இல்லை. தேவையில்லாத ஒரு மிடுக்கு அந்தக் குரலில் கலந்தொலித்தது.

அந்த மாறுபாடு எனக்கு நன்கு புலப்பட்டது. கூட இருந்த இருதயனிடம், “பிராமணனுடைய குரலைப் பார்த்தாயா?” இவனுக்குக் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. பணம் கிடைத்தவுடன் எப்படி மாறிவிட்டான் கவனித்தாயா?" என்று கேட்டேன்.

இருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.

பலபேர் புதிதாகப் பணம் கிடைத்தவுடன் மாறிப்போய் விடுகிறார்கள். பணத்தால் அவர்களுடைய நல்ல பண்புகள் மாறிவிடுகின்றன.