பக்கம்:ஏழாவது வாசல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 ஏழாவது வாசல்

உரிப்பவன். அன்று மாடு உரித்துவிட்டு இரண்டு கூடைகளில் மாட்டுக் கறியைப் போட்டுக் காவடியாகக் கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். இந்த நிலையில் வந்த அந்தப் பறையன் தன் மீது இடித்தது-தொலைவில் விலகிச் செல்லாமல்-தான் ஒரு மதகுரு-சங்கராச்சாரியார் என்பதையும் அறியாமல் தன்மேல் இடித்தது அவருக்குக் கோபத்தை உண்டாக்கி விட்டது. சீறிவரும் சினத்துடன் அவர் அந்தப் பறையனைப் பார்த்து, “அடே! சண்டாளா, நீ என் மேல் பட்டு விட்டாயே!” என்று உறுமினார்.

அந்தப் பறையன் சிறிதும் அஞ்சவில்லை. அவன் அவரைத் தெரிந்தே வைத்திருந்தான். சங்கராச்சாரியார்-வேத ஞானம் படைத்த மத குரு என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். அவன் சிறிதுகூடக் கவலைப்படாமல் அவரைப் பார்த்துப் பின் வருமாறு கூறினான்.

சுவாமி, நான் தங்கள் மீது படவுமில்லை; தாங்கள் என்மீது படவுமில்லை. நான் தங்களை இடிக்கவில்லை; நீங்கள் தான் என்னை இடித்தீர்கள் என்று சண்டையைத் திருப்பவும் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழாவது_வாசல்.pdf/74&oldid=994074" இலிருந்து மீள்விக்கப்பட்டது