பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என் குறிக்கோள்
 

'யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும், வாய்மையின் நல்ல பிற' என்ற வள்ளுவம், என் வாழ்க்கையில் எஞ்ஞான்றும் கடைப்பிடித்து ஒழுகிவரும் உண்மை நெறியாகும். என் எண்ணங்களும் செயல்களும் எழுத்துக்களும் முன்னேற்றங்களும் பணிமுறைகளும் வாய்மையாற் செம்மைப் பட்டன...

எளிய வாழ்வு,
அளவான பேச்சு,
எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை,
பதவிகளைத் தொண்டாக மதித்தல்,
தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள்,
வாழ்க்கைத் திட்டங்கள்,
பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல்,
சோர்வுக்கு இடங்கொடாத ஊக்கங்கள், -
பகட்டின்றித் தூய எண்ணத்தால்
இறைவனை வழிபடுதல்

இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.



தமிழுக்குத் தொல்காப்பியமும்,
வாழ்வின் உயர்வுக்குத் திருக்குறளும்,
உயிர்த் தூய்மைக்குத் திருவாசகமும்
எனக்கு வழிகாட்டிய தமிழ் மறைகள்.


எங்கள் தாய்வழி அய்யாவுக்கும், ஆயாளுக்கும்,
என் ஆசான் இருமொழிப்புலமை சான்ற -
மகிபாலன்பட்டி பண்டிதமணி கதிரேசனார்க்கும்
நானும் என் வழியினரும் நன்றியுடையோம்'

-வ.சுப.மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/10&oldid=1456899" இலிருந்து மீள்விக்கப்பட்டது