பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உரை


 

80. பெரியவர்களை வணங்கி வாழ்க.

81. நிலத்தைச் சீர்திருத்தி விளைவு செய்து உண்பாயாக.

82. பெரியவர்களை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொள்.

83. மடத்தன்மையை நீக்கிக் கொள்

84. போக்கிரிச் சிறுபிள்ளைகளோடு கூடாதே.

85. வீண்செலவு செய்யாமல் பொருள்களைக் காத்துப் பெருக்கி
வாழ்வாயாக.

86. யாருடனும் வீண் சண்டை போடாதே.

87. எதற்கும் கலக்கம் அடையாதே.

88. பகைவனுக்கு இடங்கொடுத்துத் துன்பம் அடையாதே.

89. தேவையில்லாமல் பேசாதே.

90. அளவுக்குமேல் சாப்பிடுதலை விரும்பாதே.

91. கலகஞ் செய்யும் இடத்தில் நிற்காதே.

92. பிடிவாதக்காரரோடு கூடிப் பழகாதே.

93. மனைவியை விட்டுப் பிரியாது வாழ்வாயாக

94. உயர்ந்தவர் சொற் கேட்டு நட.

95. பரத்தையர் வீட்டை நாடாதே.

96. சொல்வதை ஐயத்திற்கு இடமில்லாமல் தெளிவாகச் சொல்.

97. தேவையில்லாத பொருள்கள் மீது ஆசையை நீக்கு.

98. உன்னுடைய ഖல்லமையை நீயே புகழ்ந்து பேசாதே.

99. யாரிடத்தும் வீண் வாதங்கள் செய்யாதே. -

100. கல்வியைத் தொடர்ந்து கற்க ஆசைப்படு. -

101. பேரின்பம் கிடைக்கும்படி நடந்துகொள்.

102. நல்ல பண்புகளில் மேம்பட்டு விளங்கு.

103. ஊர்மக்களோடு ஒத்துழைத்து வாழ்க..

104. கத்திவெட்டைப் போல் துண்டுபடப் பேசாதே.

105. வேண்டுமென்றே தீயவற்றைச் செய்யாதே.

106. பொழுது விடிவதற்கு முன்பே விழித்து எழு.

107. பகைவர் சொற்கண்டு அவரை நம்பாதே, -

108. எந்த வழக்கிலும் ஒரு பக்கமாகப் பேசாதே.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/20&oldid=1356759" இலிருந்து மீள்விக்கப்பட்டது