பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூதுரை

35


மூதுரை
 


சினத்தில் மூவகை நிலை

23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.

குணமும் தொடர்பும்

24. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

வஞ்சனையுடையார் ஒளிந்து இருப்பர்

25. நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

கற்றோர் சிறப்பு

26. மன்னனும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு

நால்வகை எமன்கள்

27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தானின்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

கேட்டிலும் பண்பு கெடாமை

26. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் - தந்தம்
தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கெட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று.

நிலையில்லாத வாழ்வு

29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடும் போம்.

துன்பம் செய்வார்க்கும் இன்பம் செய்தல்

30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந்தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

 
மூதுரை முற்றும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/39&oldid=1332728" இலிருந்து மீள்விக்கப்பட்டது