பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறுந்தொகை

உரை



நறுந்தொகை


ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகரின் திருவடிகளை வணங்குவோம்.

அதிவீரராம பாண்டியன் கொற்கை என்னும் நகரை ஆள்பவன்; வெற்றிதரும் வேல்பொருந்திய கையை உடையவன்; பிறந்த குலத்திற்கு மணிமுடி போன்றவன். அவன் நல்ல தமிழில் விளக்கமாகக் கூறியுள்ள நறுந்தொகையைப் படித்துத் தம்மிடத்துக் குற்றம் உண்டாகாதவாறு நீக்குபவர், ஒரு குறையும் இல்லாதவர் ஆவர்.

மழை, பயிர், உயிர், அறம் எல்லாம் வாழ வேண்டும்.

1. கல்வி கற்பித்த ஆசிரியன் கண்ணாற் காணப்பெறும் கடவுள் ஆவான். -

2. குற்றம் இல்லாதபடி பேசுவதே கல்விக்கு மதிப்பாகும்.

3. தம் சுற்றத்தாரைக் காப்பது செல்வர்க்குப் பெருமை. -

4. வேதங்களை முறையாக ஒதுவதும் அவற்றிற் சொன்னவாறு நடத்தலும் வேதியர்க்குச் சிறப்பாகும். - -

5. நீதிமுறைப்படி ஆட்சி செய்வதே அரசர்க்கு அழகாகும். -

6. மேன்மேலும் வளரும் செல்வத்தைப் பெருக்குவதே வணிகர்க்கு உயர்வு.

7. பயிர் செய்து உண்பதை விரும்புதல் வேளாளர்க்குப் பெருமை. - -

8. பின்வருவதை முன்னதாக அறிந்து அரசர்க்குச் சொல்லுதலே மந்திரிக்குச் சிறப்பு. - -

9. அஞ்சாமையும் வீரமும் படைத்தலைவனுக்கு மேன்மை.

10. வந்த விருந்தினருடன் கலந்து இருந்து உண்ணுதலே குடும்பத்துக்கு நல்லது. - -

11. எதிர்வாதம் செய்யாமல் அமைதியாகக் குடும்பத்தை நடத்துவதே வீட்டுப் பெண்களுக்கு முறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/52&oldid=1332741" இலிருந்து மீள்விக்கப்பட்டது