பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறுந்தொகை

55



நறுந்தொகை


39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

40. அச்சம் உள்ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே

41. யானைக் கில்லை தானமும் தருமமும்

42. பூனைக் கில்லை தவமும் தயையும்

43. ஞானிக் கில்லை இன்பமும் துன்பமும்

44. சிதலைக் கில்லை செல்வமும் செருக்கும்

45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும்

46. அச்சமும் நாணமும் அறிவிலோர்க் கில்லை

47. நாளுங் கிழமையுங் நலிந்தோர்க் கில்லை

48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா

50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து ஒரூர் நண்ணினும் நண்ணுவர்

51. சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்

52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்

53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்.

54. எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும்

55. பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/59&oldid=1332748" இலிருந்து மீள்விக்கப்பட்டது