பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

உரை



உலகநீதி

மனமே! -

4. பிறர் குற்றங்களைப் பலரிடம் எடுத்துச் சென்று சொல்லாதே.

கொலை, களவு செய்பவர்களுடன் நட்புக்கொள்ளாதே.

படித்தவரை ஒருபோதும் பழித்துப் பேசாதே.

கற்புடைய பிற பெண்களைக் காமுறாதே.

அரசரோடு எதிர்வாதம் செய்யாதே.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே. -

ஈடு இல்லாத வள்ளியின் கணவன் முருகனை வணங்குவாயாக.


மனமே!

5. மணமான பெண்ணைக் கணவருடன் வாழவிடாமற் செய்யாதே. -

மனையாளைக் குற்றம் சொல்லாதே; பொறுத்துக்கொள்.

செய்யத்தகாத தீயநெறியில் விழக்கூடாது.

போரில்பயந்து புறங்காட்டித் திரும்பி வரவேண்டாம்.

பண்பில் தாழ்ந்த குலத்தவனோடு சேராதே.

எளியவர்களை இகழ்ந்து பேசாதே.

சிறந்த வாழ்க்கையுடைய குறவர் மகளான வள்ளியின்
கணவன் முருகனை வணங்குவாயாக.


மனமே! -

6. விண்பேச்சுக்காரரின் சொற்களைக் கேட்டு அலையாதே.

மதியாதர் வீட்டுக்குப் போகாதே. -

பெரியோர்கள் கூறும் அறிவுரையை மறக்காதே.

முன்கோபம் உடையவருடன் சேராதே.

ஆசிரியரின் சம்பளத்தைக் கொடாமல் வைத்துக் கொள்ளாதே.

வழிப்பறி செய்வாரோடு சேராதே.

மிகுந்த புகழ் உடையவனும் ஒப்பற்ற வள்ளியின்
கணவனுமாகிய முருகனை வணங்குவாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/78&oldid=1332767" இலிருந்து மீள்விக்கப்பட்டது