பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் 'றியவற்றின் . 'மாமல் கரடி, நாய், நரி, சில பறவைகள் முதலியவற்றின் - எலும்பு. அமைப்பினையும் மாற்றத்தினை யும் நன்கு விளக்கியுள்ளனர். யானைகள் போன்றவை 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி பல வகையில் மாறி இன்று நாம் காணும் நிலையில் உள்ளன. மனிதனும் ஏறக் குறைய அக்கால முதலே தோன்றி அதனுடன் வாழ்ந்து, அதை உணவுக்காக வேட்டை ஆடினன் என்ற குறிப்பும் உள்ளது. இவ்வாறு உயிரின வளர்ச்சிக் கூறுகளை நான்காவது மாடியில் ஒருபுற்ம் (Two ways) கண்ட நான் மறுபக்கத்தில் நுழைந்தேன். அங்கே உலகம் தோன்றிய, விதம் பற்றிய முற்றிய அறிவுடையார் ஆய்வுகள் இருந்தன. அணுவிலிருந்து (ஒலியியல்) (Electrons & Proton) மிகநுண்ணிய வெட்ட வெளியிலிருந்து-நுண்ணிய அணுக் கூறுகளின் சேர்க்கையால் உலகம், உண்டான வகையினைத் தக்க் சான்றுகள் காட்டி விளக்கியுள்ளனர். முதலில் கல் தோன்றிய பின் பல உலோ கங்கள் உள்ளே அமைந்தன என்கின்றனர். நம் நாட்டுக் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்ற அடிகள் என் நினைவுக்கு வந்தன. பொழுதும் - காலமும் ஆற்றலும் (Time 8 Energy, என்று விளக்கங்காட்டி வானவெளியில் உயிரணுக்களின் வாழ்வுப் பேரண்டங்களையும் பின் கடல் உலகம் இவற்றின் தோற்ற விளைவு மாற்றங்களையும்(Inter Action of Forces) காட்டியுள்ளனர். இவ்வுலகில் உள்ளமைந்த கூறுகளையும் பொழுதின் மாற்றங்களையும் சுமார் 250 மில்லியன் ஆண்டு களில் நடைபெற்ற வகையில் விளக்கியுள்ளனர். (எனினும் இவை அமெரிக்க மண் அடிப்படையில் மட்டும் அமைகின்றது. நம் தமிழகம், மத்திய தரைகடல் ஆய்வு அமையின் இன்னும் சிறக்கலாம்.) பல உயிரினங்கள் மண்ணொடு கால வெள்ளத் தில் புதைபட்டு மறைந்ததையும் அவற்றின் எலும்புக்கூடு கள் வைத்து ஆய்ந்து கண்ட முடிபுகளையும் காட்டியுள்ள னர். (Radio Activity provides Measurement in years), 176# கடல்வாழ் உயிரினம், அதன் உட்கொடிகள், அங்கே உயிர்