பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கொண்டுள்ளவர்களென்று கூறி, கல்வி முறைகள் பற்றி விளக்கங்கள் கூறினார்கள். நான் முன்னரே குறித்தபடி மத்திய மாநில அரசுகள் கல்விப் பொறுப்பை ஏற்கவில்லை; அந்தந்த ஊர்ச் சபைகளே அப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றன. பொதுப் பள்ளிகள் (Public School) இவர்கள் வரிப்பணத்தால் நடப்பதால், இவர்களே பள்ளியின் ஆட்சிக் குழுவினை ஆண்டு தோறும் தேர்ந்தெடுப்பர். அக் குழுவின் தலைவர், தலைமை ஆசிரிய ரையும், பிற ஆசிரியர்களையும் தேர்ந்தெடுப்பர். இவரும் பிறரும் ஒழுங்காகப் பணி செய்யவில்லையானால் அடுத்த ஆண்டில் நீக்கப் பெறுவர். (நம் நாட்டினைப் போல் உரிமை கோரி நீதி மன்றம் செல்லும் நிலை இங்கே கிடையாது.) எனவே ஒவ்வொருவரும் நன்கு தத்தம் கடமைகளைச் செய்கின்றனர். எனவே ஆரம்பக் கல்வி இங்கே சிறந்து நிற்கின்றது. - பெற்றோர் அடிக்கடி ஆசிரியர்களைக் கண்டு தத்தம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பற்றிப் பேச வாய்ப்பு உண்டு. மூன்று திங்களுக்கு ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் உண்டாம்; எல்லாப் பெற்றோர்களும் தவறாது வர வேண்டு மாம். ஆசிரியர்களுக்குள்ளே, பள்ளிக்கு ஏற்றபடி பதின்மரோ அன்றிக் குறைவாகவோ, ஒரு தனி மேற்பார்வைக் குழுவினை அமைப்பார்களாம். அவர்களிடம் பள்ளி மாணவர்கள் (ஒவ்வொருவருக்கு சிலவகுப்புகள்-சில பிரிவுகள்)ஒப்படைக் கப் பெறுவர்; அவர்களிடம் பள்ளிக்கு வந்ததும் தம் வரவு கூறி (Attendance) பின் வகுப்பிற்குச் செல்வர். வகுப்பு ஆசிரியர்களும் அப்பிள்ளைகள் பற்றிய எல்லாத் தகவல் களையும் அக் குழு உறுப்பினரிடம் தர, அவர் தேவையாயின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு ஆவன காண்பர். அக் குழுவும் ஆண்டுதொறும் மாற்றி அமைக்கப்பெறுமாம். இவ்வாறு ஆண்டுதொறும் தேர்தல் போன்று அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவதால், எல்லோருமே கடமையில் கருத் தாக உள்ளனர். பணி ஏற்கும் ஆசிரியர்களுள் பலரும் 'ஏதோ