பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு - 1 0.5-85 விடியற்காலை 5 மணி அளவில் கண் விழித்தேன். காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, அடுத்த ஒரு மாதத்திற்கு அமைந்த பயணம் பற்றி எண்ணி முடிவு செய்தேன். இந் நாட்டில் இன்னும் செல்லவேண்டிய இடங் களுக்கு உடனே பயணப் பதிவு செய்துவிடல் நல்லது என்றனர். 1-6-85ல் ஹானலூலு விலிருந்து டோக்கியோ செல்லவும் பின் இந்தியா வரைக்குரிய பயணங்களும் பதிவு செய்யப்பெற்றன. எனவே அமெரிக்க நாட்டில் உள்ள பிற பயணங்கள் பற்றியும் தங்க வேண்டிய நாட்கள் பற்றியும் முடிவு செய்தேன். இந்த ஊரில் வரலாறு பற்றியோ வேறு வகையிலோ முக்கியமான இடங்கள் இன்மையாதலாலும் மிகவும் குளிராக இருந்தமையானும் எங்கும் வெளியில் செல்லவில்லை. இருவரும் பணி மேற்சென்றமையின் நான் தனிமையில் வீட்டில் ஒய்வு கொண்டேன். இவர்கள் "Electronic சம்பந்தமான பணியில் உள்ளமையின், மாலையி லும் நாளை மறுநாளிலும் அதுபற்றிச் சில கேட்டறிய விரும்பினேன். வீட்டிலேயே இருந்தேன். யாருமில்லை. தொலைக் காட்சியினைப் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தேன். இதுவரை நீதி மன்றங்களைப் பற்றி அறியாத எனக்கு, தொலைக்காட்சியில் ஒரு விசித்திர வழக்கு பற்றிய விசாரணை கிடைத்தது. ஒரு பெண் தனக்கு உற்றவர் ஒருவரைக் கொலை செய்ததாக வழக்கு (உண்மையில் அவள்