பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அச்சத்தால் மூடிய கண்ணைத் திறந்தேன். காடுகள் பற்றி எரிந்தன. மனிதர்கள் யாருமில்லை. ஆனால் ஆற்றங்கரையில் அழகிய வண்ண உடை அணிந்த தெய்வ உருவில் பல பெண்களும் ஆண்களும் ஆடியும் பாடியும் வரிசை வரிசையாக நின்றிருந்தனர் - ஆடினர் சிலர் . வீணை வாசித்தனர் சிலர் - பிடில் போன்ற சில வாத்தியங்களும் முழங்கின. வாய் திறந்தும் பலர் பாடினர். வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்க, கொட்டிமுழக்கு மந்தக் கூட்ட முதல் பாட்டினிலே என்னைப் பறிகொடுத்தேன்' . எங்கிருந்தோ இன்னிசை முழக்கம் கேட்டது. அப்படியே மகிழ்ச்சியில்.காட்டு விலங்கு களிலிருந்தும் காட்டு மனிதர்களிடமிருந்தும் காப்பாற்றிய அந்தத் தெய்வத்தை நினைத்துக் கண்ணை முடினேன். திறத்து பார்க்கும்போது நான் நிலத்தில் இல்லை. நான் வந்த படகு இல்லை.பழைய ஆறு இல்லை - பாட்டு இல்லை - ஆட்டம் இல்லை . எங்கோ வானவெளியில் வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். என்ன இது? இது என்ன உலகம்: எங்கே இருக்கிறேன்?'ஒன்றுமே புரியவில்லையே இடியொடு கலந்து மேகம் கொட்டு மழையை விட்டு இருந்தது. எனினும் விண்வெளிக்கலம் என்னை எங்கெங்கோ தூக்கிச் சென்றது. பல கோளங்கள் - உயிரற்ற பரந்த உலகங்கள். உருண்டை கள். அவை வெகு வேகமாக ஒடிச் செல்லும் வான வீதி. அந்த ஒடும் உருண்டைகள் பெரியன சில. சிறியன சில. அவற்றின் வேகத்தை என்னால் அளவிட முடியவில்லை. மாணிவாசகர் சொல்லிய திருவண்டப் பகுதி அடிகள் என் நினைவுக்கு வந்தன. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப் பருந்தன்மை வளப்பருங் காட்சி இல்நுழைவு கதிரின் துன்அனுப் புரைய நூற்றொரு கோடியின் மேற்பட்ட விரிந்தன