பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இந் நாட்டுக் காவல் முறை சிறந்தது. எங்கும் சாலை களிலும் சாலைகள் இணைப்பிலும், உந்துவண்டி நிற்குமிடங் களிலும் விமான நிலையத்திலும், அரசு அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் திறம்படக் காவல் புரிவதோடு, அறியாதோருக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் உள்ளனர். அவர்கள் செயல் நினைந்து விமானநிலையம் வந்தபோது, எனக்கு அத்தகைய காவலர் ஒருவர் உதவி செய்தார். இவ் விமானநிலையம் மேலை நாட்டு விமான நிலையங்களைப் போன்று மிகப் பெரியது. முறைப்படி, காவல் துறை, சுங்கத்துறையினர் பிற அதிகாரிகள் ஒவ்வொரு பயணியை யும் சோதித்து அனுப்புகின்றனர். மிக்க மரியாதையோடு அனைவரையும் நடத்துகின்றனர். நான் விமான நிலையம் வந்து, காலைச் சிற்றுண்டி கொண்டேன். நாணய மாற்றமும் செய்து கொண்டேன். எனக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியாக 9.30க்கு விமானத்தில் ஏறினேன். முன் கூட்டியே எனக்கு மரக்கறி உணவுக்கு ஏற்பாடு செய்திருப்ப தைச் சொன்னார்கள். பொதுவாக எல்லாப் பணியாளர் களும் அன்புடன் எல்லாப் பயணிகளையும் நடத்துவது மகிழ்ச்சி தரத்தக்கதாக இருந்தது. விமானமும் சரியாகப் 10மணிக்குப் புறப்பட்டது. கீழை நாட்டுத் திலகமாகிய ஜப்பான் நாட்டை வண்ங்கி விடைபெற்றேன். (இரவே திரு. பேராசிரியர் காரசிம்மா அவர்களுக்குத் தொலைபேசி வழியில் கூறி விடைபெற்றேன். அவர் ஜூலையில் சென்னை வருவதாகக் கூறினார்). ஜப்பானிய மக்கள் பெரும்பாலும் நடுத்தர வகுப்பினைச் சார்ந்தவர்களே. பெரும் ஆடம்பர வாழ்வோ போக வாழ்வோ அவர்கள் அறியார் - பெரும்பாலோர் நடந்தும் பொதுப்போக்குவர்த்து வழியுமே செல்கின்றனர். பஸ்களும் நிறைய உள்ளன. பொருள்கள் விலை மேலைநாடுகளைப் போன்று உயர உள்ளதால் பலர் உண்மையில் வாடுகின் றனர். பலர் (flat) அடுக்குகளில் வாழ்கின்றனர். துணிகளை யெல்லாம் துவைத்து. தத்தம் பகுதியில் உள்ள புறநிலையில்