பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் 1 மணி அளவில் வெளியே வந்து, அடுத்து நான் செல்ல வேண்டிய மலை உச்சிக்கு வழி கேட்டேன். அங்கே உள்ள அலுவலர், காவல்துறையினர், உயர் அதிகாரிகள் யாரும் எதையும் தெரிந்தவராகவோ . அல்லது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவராகவோ இல்லை. பிற நாடுகளைப் போலன்றி, இந் நகர் மக்கள் நின்றுகூடப்பதில் சொல்வதில்லை. கண்டும் காணாததுபோல் உள்ளனர் (காவலர் உட்பட). பிறகு எப்படியோ கேட்டறிந்து இரு உந்து வண்டிகள் ஏறி, பிற்பகல் 2-3க்கு அந்த மலை உச்சி யினை (Peak) அடைந்தேன். அங்குள்ள ஒரு பெரு ஒட்டலில் (விலை அளவில்) புகுந்து சன்னல் ஒரமாக உட்சார்ந்து கடலையும் துறைமுகத்தையும் ஊர்ந்து செல்லும் கப்பல் விசைப் படகுகளையும், மாடிக் கட்டடங்களையும் பிறவற்றையும் கண்டு கொண்டே மெல்ல ரொட்டித் துண்டு உட்கொண்டேன். சுற்றிலும் சிறு குன்றுகள் கடல் நடுவே நின்றன. அவை வரண்டே காணப்பெற்றன - மரங்கள்கூட இல்லை. கடல்நீர் அலையற்றிருந்தது. நடுவில் நீரில் மேடு பள்ளம்போல் காணப்பட்டது. ஒருவேளை அடித் தரை அமைப்பு அப்படியோ என எண்ணினேன். நெடிது இருந்து நீள நினைந்து பிறகு 3-30க்கு வெளிவந்து நாற்புற மும் கண்டு, அங்கிருந்து டிராம் வண்டி வழியே கீழே இறங் கினேன். - - ஊருக்குள் ஒடும் டிராம் வண்டிக்கும் இதற்கும் தொடர்பு இல்ல்ை. இதன் பழமையைக் காப்பதற்கெனவே . இதை வைத்துள்ளனர். இது 1888-ல் அமைக்கப்பெற்றதாம். பல செல்வர்கள் உயர்மலைகளில் மாளிகை அமைக்க நினைத்தபோது வேறு வழிச் சாலைகள் இன்மையில் இதையே பயன்படுத்தினார்களாம். 1300 அடி உயரம் உள்ள சிறு மலைச் சரிவில் இது ஓடுகிறது. ஒரே ஒரு வண்டி: சுமார் 60 பேர் அமரலாம். திரும்பத் திரும்ப 10 நிமிடங் களுக்கு ஒரு முறை ஒடுகிறது. சிலவிடம் செங்குத்தாக உள்ளது. அடிப்பாதையில் (இரும்புத் தண்டவாளம்)