பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்க்ப்பூர் 11.6.85 455 இன்றி, இருவரும் இணைந்து காட்சி தரும் வகையில் கோயில் அமைப்பு இருந்தது. விசுவநாதர் விசாலாட்சி அம்மையின் கோயிலில் சென்று இறைவனையும், அன்னையையும் வணங்கினோம். கோயில் தூய்மையாக இருந்தது. அர்ச்சனைக்குப் பழம்' கொண்டு செய்தால் 50 காசு எனவும் தேங்காய் கொண்டு செய்தால் ஒரு டாலர் எனவும் எளிய வகையிலேயே கட்டணம் அமைத்திருந்தனர். பலர் அங்கே வழிபாடாற்று வதைக் கண்டேன். ஆங்கில நாட்டு மக்களும், சீனா மக்களும்கூட வழிபாட்டில் கலந்துகொண்டு, தம்மை மறந்து நின்ற நிலையினை எண்ணினேன். நானும் என்னை மறந்து, இறைவனை வழிபட்டு, அடுத்து, திருமால் . சீனிவாசர் கோயிலுக்குள் நுழைந்தேன். பெருமாள் கோயிலில் விநாயகருக்குத்தான் முதல் வழிபாடு. சில கோயில்களில் தும்பிக்கை ஆழ்வார்' என்று நம் நாட்டில் பெயரை மாற்றுவதுபோல இங்கே செய்ய வில்லை. ஆண்டாளுக்கும் அம்மை இலக்குமிக்கும் தனியா கச் சன்னதிகள். ஆழ்வார் மூவருக்கு (திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார்) மட்டும் தனிச் சன்னதி. ஆழ்வார் பிறர் இல்லையே என்றேன். விரைவில் ஏற்பாடு செய்யப் போவதாகச் சொன்னார்கள். நாங்கள் சென்றபோது, வசந்ததின் கடைசிநாள், இறைவன் இருபுடை அன்னையார் சூழ - சீதேவி பூதேவி . காட்சி அளித்தான்.ஐந்து நாதசுரமும் ஐந்து தவுலும் சேர்ந்த வாத்தியக் கச்சேரி, சிறு கோயில்; அதை இறைவன் வலம் வரச் சுமார் 3 மணி நேரம் ஆயிற்று. அத்துணை அளவும் வாத்தியக் கோட்டியினர் மிகஉருக்கமாக வாசித்து இறைவன் கருணையைப் பெற்றதோடு, வந்திருந்த மக்கள் உள்ளத் தையும் உருக்கினர். நம் நாட்டில்கூட இதுவரையில் ஒருசேர ஐந்துநாதசுரக்காரர் சேர்ந்து வாசித்த சிறப்பினை நான் கண்டதில்லை. இங்கே சிங்கப்பூர் மக்கள் கொடுத்து வைத்