பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


கம்பன்
உறக்கத்தின் மயக்கமோ ஊட்டிய கை கழுவிலையோ
உண்டது உள் நாக்கில் இனித்துக் கொண்டிருக்கிறது.
மறுபடியும் ஒரு படையலோ என மறுத்தாள்
உரிமையோடு அவனை உண்ண அழைத்தாள்
என் உதட்டு பருக்கையை உன் உடையில்
துடைத்தேன் என்றான். அவளும் திகைத்தாள்
இளஞ் சிரிப்பும் வளையோசையும் கேட்டது
இருவரும் வளையோசை வந்த திசையை
நோக்கினர். அன்னை அழுந்தூர் மாகாளி
சிரித்த முகத்தோடு சிலையாக இருந்தாள்
எண்ணைக் கறையும் சோற்றுப் பருக்கையும்
அவள் ஆடையில் பளிச்சிட்டன. பதறினான்.
ஆற்றாமை மிகுந்து அழுது விட்டான்.
கம்பன்
இமயத்து வேந்தன் மகளே உமையவளே
சிமயத்து எழுந்த செந்தழல் கொழுந்தே
கந்தனுக்கு வேல் கொடுத்த கதையும் உண்டு
சம்பந்தனுக்குப் பால் கொடுத்ததைப் படித்திருக்கிறோ
பந்தம் பிடித்து பைந்தமிழ் வளர்த்தனையோ
பாசத்தைச் சோறாக ஊட்டினையோ அம்மா
இதற்கு முன் எத்தனை பிறவி எடுத்தேனோ
இன்னும் எத்தனை பிறவி எடுப்பேனோ
ஏதும் இந்தப் பிறவிக்கு ஈடில்லை

மகாசக்தி காளிக்கு நான் மைந்தன்