பதிப்புரை
1944 ஆம் ஆண்டிலிருந்து அறிஞர் அண்ணா அவர்களின் உரைகள், கல்லூரிகளில் மாணவர்களின் மத்தியில் முழங்கத் தொடங்கின. பச்சையப்பன் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இப்படியாக உரை நிகழ்த்தாத கல்லூரியே இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. உரை நிகழும்போது மாணவர்கள் வெள்ளம் போல் கூடினர்; ரசித்தனர். கைதட்டல்களுக்கும் சிரிப்பொலிகளுக்கும் கணக்கில்லை: சிந்தித்தனர்; பின்பற்றத் தொடங்கினர். இவ்லாறு அண்ணாவின் உரையால் மாணவர் உலகில் புத்துணர்ச்சி பரவியது: புதுவாழ்வு பெருகியது.
எத்தனையோ பேச்சாளர்கள், பேராசிரியர்கள் உரை நிசழ்த்தி வந்திருக்கிறார்கள் என்றாலும். அண்ணாவின் உரைக்குத் தனிச்சிறப்பும் ஆற்றலும் உண்டு என்பதைத் தமிழகம் நன்கு அறிந்துகொண்டது. மேலும், இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் அண்ணாவின் உரை பரவாத இடமே இல்லை என்று சொலளலாம். இராஜ்ய சபையில் ஆற்றிய உரைகேட்டு, அமைச்சர்களும், உறுப்பினர்களும் அதிசயித்தனர். பிரதமர் நேரு அவர்கள் அண்ணாவின் உரையைக் கேட்பதற்காகவே, அப்போது சபையில் குறிப்பாக வீற்றிருந்தார் என்றால், அவரது உரையாற்றலின் பெருமைக்கு அளவு ஏது ?
அண்ணாவின் உரையில் வரலாறு உண்டு; மூடப் பழக்கவழக்கத்தை முறியடிக்கும் திறன் உண்டு; இலக்கியக் காட்சிகளை எடுத்துக் காட்டும் நயத்தைக் காணலாம: அரசியல் அறிவிப்புகளைக்