பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

121


படியே, தலைவனில்லத்துப் புகுந்தனள். புகுந்தவள், அங்கு எதிர்ப்பட்ட தலைவனைத் தன்னில்லத்திற்குப் பற்றிச்சென்றனள் என்பதும் பொருந்தும். அதுகண்டு தலைவி ஊடினள் என்றும் அப்போது சொல்க.

'உடலினேன் அல்லேன்' என்றது, அவள் தன் கற்புச்செவ்வி தோன்றக் கூறியதாம்; 'பொய்யாது உரைமோ' என்றது, பொய்த்தலே தலைவனின் இயல்பாதலைச் சுட்டிக் கூறியதாம்.

மேற்கோள்: புதல்வனை நீங்கியவழித் தலைவி கூறியதற்கு இதனை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 6).

67. அவள் மடவள்!

துறை : தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, புறனுரைத்தாள் எனக் கேட்ட தலைவி. தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது.

[து. வி.: பரத்தை தன்னைப்பற்றி இழிவாக ஏதோ கூறினாள் எனக் கேட்டாள் தலைவி: தலைமகன் வீடு வந்த விடத்து, அப்பரத்தைக்கு வேண்டியவர்கள் கேட்குமாறு அவனிடத்தே ஊடிச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

மடவள் அம்ம, நீ இனிக்கொண் டோளே -
தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலம் தருக்கும்' என்ப; விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே,

ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே!

தெளிவுரை: தலைவனே! நீ இப்போது தலைக்கொண்டு ஒழுகும் பரத்தையானவள், தன்னை என்னோடும் நிகரினளாகக் கருதித், தன் பெருநலத்தைத் தருக்குடன் வியந்து கூறிளை என்பர். நின்னாலே முன்பு நலனுவிணப்பட்டு, ஓதியடுத்த ஒளிநுதல் பசப்பிக் கொண்டோரான மகளிர்கள். இதழ்விரிந்த மலர்களிலே தாதுண்டு பின் அதனை மறந்துவிடும் வண்டினாற் கழிக்கப்பட்ட மலர்களினும் பலராவரே! இதனை அவள் அறிந்திராத மடமையாட்டியே போலும்!