பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

151


அவளைத் தனக்கேற்ற காதன்மைக்குரிய பெண்டு என்று எண்ணி அவன் எவ்வாறு அவளிடத்தே ஒழுகுகின்றான் அல்லன். அவள் தன் மனைவியாக (மனைப்பாங்கின் தலைவியாக) ஒழுகும் அந்தப் பண்பினைக் கருதியே, அவளுக்குத் தலையளிசெய்து, தன் கடமையாற்றுகின்றான்!

கருத்து: 'அவன் என்னிடத்தேயே பெருங் காதலுடையான்' என்றதாம்.

சொற்பொருள்: 'எவ்வை’ தலைவியைக் குறித்தது. அளித்தல் - கூடியின்புறுதலாலே அவளுக்கு இன்பமும் மனநிறைவும் அளித்து உதவுதல். பெண்டு - காதற்பெண்டு. பண்பு - மனைவியாம் இல்லறத் தலைமைப்பண்பு.

விளக்கம் : தலைவிபால் காதலன்பு ஏதும் பெற்றிலன் எனினும், தன் மனையறம் செவ்விதாக நிகழும் பொருட்டாகவும், ஊரவர் பழியாதிருக்கவும். அவள் தன்பாற் கொண்டுள்ள பற்றுதல் நீளவும், அவளுக்கும் தலைவன் தலையளி செய்வான் என்பதாம். ஆகவே, மீளவும் தன்பால் வருவான்; தலைவி அதுபற்றிய நினைவோடிருப்பாளாக என்று எச்சரித்ததாம்.

உள்ளுறை: 'பழனத்து வண்டு தாதூதும் ஊரன்' என்றது, அவ்வாறே பொதுமகளிர் சேரியிடத்தேயுள்ள இளம் பரத்தையரை ஒருவர் ஒருவராக நாடிச்சென்று இன்புறும், காமங் கட்டவிழ்ந்த இயல்பினன் தலைவன் என்று கூறியதாம்.

பாட பேதம் : 'வேண்டென விரும்பின்று' எனவும் பாடம்; இப்பாடத்திற்கு, அவளை விரும்பியொழுகு என்று வாயில்கள் வேண்ட, அவன் அவளைச் சென்றுகூடித் தலையளி செய்தனன் என்று பொருள் கொள்ளுக.

90. யார் குணம், எவர் கொண்டது?

துறை : தலைமகன், தன் மனைக்கண் செல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதற்பரத்தை, தலைமகன் கேட்குமாற்றால், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

[து. வி.: *தலைமகன், தன்னை விரும்பி வராமற்படிக்குத் தடுப்பவள் காதற் பரத்தையே' என்று, தலைமகள், ஒருநாள்