பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 253 ஆப்பிரிக்கா எருமையும் நிறத்திலும் வேறுபட்டிருக்கின்றன. இவற்றுட் காங்கோ செம்மைநிறமும், சுதானம் சாணகிற மும் (Brown colour) மேலேயாப்பிரிக்காட்டவை மிக்க செம்மையும் பிறவும் கலந்த நிறமும் பெற்றுள்ளன. நம் நாட்டவை கருந்தாளும், செங்கண்ணும், வலிய கோடும், மெய்வன்மையும் பெற்றிருக்கின்றன. இவற்றை நம் தமி ழாசிரியன்மார், சிறப்புற விதந்து கூறியுள்ளனர். 'கருந்தா ளெருமை” என இந்நூலுள்ளும், கழுநீர் மேய்ந்த கருங்கா ளெருமை' என நற்றிணேயினும் (260) கூறப்படும். 'நெறி மருப் பெருமை நீல விரும்போத்து, "கருங்கோட் டெரு மைச் செங்கட் புனிற்ரு,' "சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்,' எனவும், இவைபோல்வன பிறவும் மேற்கூறிய வற்றை வலியுறுத்துவனவாகும். எருமையினத்துள் மக்கட்பயிற்சியில் வாராத காட் டெருமைகள், பயிற்சியில் வந்துள்ள ஏனையவற்றினும் மிக்க வன்மையுடையவாம். பயிற்சிபெற்ற எருமைக்கோடுகளையே, “ இரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை, மள்ளரன்ன தடங்கோட் டெருமை ' எனச் சிறப்பித்தும், மெய்வன் மையை, "கருங்கோட்டெருமை கயிறுபரிங் தசைஇ", "செங் கட் காரான், ஊர்மடி கங்குலின் நோன்றளை பரிந்து, கூர்முள் வேலி கோட்டின் நீக்கி’ என எடுத்துமொழிபவெனின், காட்டெருமைகளின் வன்மைமிகுதி சொல்லவேண்டா வாயிற்று. காட்டெருமைக்கடா வொன்று மூன்று அரிமாக் களே!டு போர்செய்யக் கண்டதாகக் கண்டோர் கூறியிருக்கின் றனர்ாம். விலங்கு வேட்டையிற் கைதேர்ந்தவர்கள், அரிமா வின் ஆற்றலினும், வெகுண்டுபாயும் எருமைக்கடாவின் ஆற் றலே பெரிதும் அஞ்சத் தகுவதெனக் கட்டுரைக்கின்றனர்."

  • The courage of these beasts is superb, and one fine bull has been seen to do battle with three lions. |Experienced hunters declare that the charge of a furious buffalo bull is more to be feared than that of the lion—

Ιύψά, - - - -