பக்கம்:ஐந்திணை வளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 107 மறைமுகமாகவும் அவர்களுக்குத் தன் கருத்தினை அறிவுத்துகின்றாள். எனினும் அறிவிழந்து ஒழுகிவருகின்ற அவர்களது நினைவெல்லாம் ஒருவரையொருவர் அடைந்து இன்புறுதலான அந்த ஒன்றனிடத்தேயே சென்றதனால், அவர்கள் உலகியலைப்பற்றிக் கருதாதேயே தம்போக்கில் ஒழுகி வருகின்றனர். - இந்த நிலையிலே, ஒருநாள் இரவு தலைவியோடுதானும் தலைவனின் வருகைக்காகக் குறித்த இடத்தில் வந்து காத்திருந்த வேளையிலே, தலைவன் வந்து வேலிப்புறமாக நிற்பதனை உணர்ந்த தோழி, தலைவிக்குச் சொல்லுவாள் போல, அவனும் கேட்டு வரைதலை மேற்கொள்ளத் தூண்டும் நோக்கத்துடன், சில சொற்களை உரைக்கின்றாள். 'ஆராய்ந்து அணியப்பட்டு விளங்கும் அணிகளை உடையவளே!’ 'கண்களின் தன்மையைக் கொண்ட நெய்தற் பூக்கள் மலர்ந்து மணங்கமழ்ந்து கொண்டிருக்கின்ற, வளைந்து செல்லும்படியான கழிக்கால்களை உடைய, குளிர்ச்சியும் அழகும் வாய்ந்த கடற்றுறைக்கு உரியவனான நம் தலைவன், தனது பழைய தன்மையினை உடையவன் அல்லனாயினான்.' 'நம் அழகனைத்தும் அவனுடைய கையுள் அகப்பட்டுக் கொண்டதனை, அவன்,தன்னுடைய ஆண்மைச்செயலினாலே அடைந்து கொண்டதெனக் கருதினான். சுருதிச் செருக்கியவனாகப் பண்ணுதல் அமைந்த தேர்மேல் ஊர்ந்தவனாகவும் நம்பால் வருகின்றான். ஆனால், நின்னை வரைந்து மணந்து கொள்ளுதல்தான் ஆண்மைச் செயல் என்பதனை அவன் உணர்ந்தானில்லையே! என்கின்றாள் தோழி. தலைவியின் உள்ளமும் மணந்து வாழும் இல்வாழ்விலேயே ஈடுபட, அதனைக் கேட்கும் தலைவனும், தன்னுடைய செயலுக்கு நாணியவனாக, விரைவிலே அவளை விரைந்து வந்து மணந்து கொள்ளுதற்கு முற்படுவான் என்பது இதனால் விளைவதாம். - கண்ணுறு நெய்தல் கமழுங் கொடுங்கழித் தண்ணந்துறைவனோ தன்னிலன்; ஆயிழா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/115&oldid=761796" இலிருந்து மீள்விக்கப்பட்டது