பக்கம்:ஐந்திணை வளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58, ஐந்திணை வளம் இயலுமா? இயலாது என்பதனைத்தான் இச் செய்யுளால் நமக்குக் கூறுகின்றார்.அவர். - - நீரில் அருஞ்சுரத்து ஆமான் இனம்வழங்கும் ஆரிடையத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்! நாணினை நீக்கி உயிரோடு உடன்சென்று காணப்புணர்ப்பதுகொல் நெஞ்சு? - இதனைக் கேட்டதும் தோழியின் உள்ளமும் வேதனையடையத் தொடங்குகின்றது. இந்த நிலையிலே துயருறும் தலைவியைத் தெளிவிக்க,மேலும் எதனை உரைப்பது என்ற சிந்தனையிலே, அவள் அதன்பின் ஆழ்ந்துவிடுகின்றாள். ஆமான்-காட்டுப்பசு. புணர்ப்பது-விரும்புவது 5. வலன் உயர்ந்து தோன்றும் ஒரு தலைவனும் தலைவியும் களவு உறவிலே கூடித் திளைத்து வருபவராக இருக்கிறனர். அது முற்றவும் நீடிக்காது என்பதனை உணர்ந்த தலைவன், தலைவியை வரைந்து மணவாட்டியாகக் கொள்ளுதலிலே மனஞ் செலுத்தத் தொடங்கினன். இந்த நினைவினாலே உந்தப்பட்ட அவன், அதற்கான பொருளைத் தேடி வருதலை மனத்துட் கொண்ட வனாகத்தலைவியைப்பிரிந்துவெளிநாட்டிற்குப்போயிருந்தனன். “வரைவிடைவைத்துப்பிரிந்தனன் என்றபோதுவரைவு தனக்கு நிலையான இன்பத்தைத் தருவது என்பதனை அறிந்திருந்தாலும், தலைவியின் உள்ளம் அவற்றின்பால் எல்லாம் செல்லவில்லை. அவள் உள்ளமெல்லாம் தலைவனது செலவினை ஒட்டியே சுழன்று கொண்டு இருந்தது. தலைவியின் இந்த நிலைமையைக் கண்டு அவளது ஆருயிர்த்தோழி மனங் கலங்குகின்றாள். அப்போது, தலைவி அவளுக்குச் சொல்லுகின்றாள், 'புள்ளிகள் ஒளியோடு விளங்கும் காட்டுக் கோழிச் சேவலானது வரிகளையுடைய மரற்செடியினைத் தன் அலகினாற் குத்திப் போடுதலினாலே, வழியிடை எல்லாம் தோன்றாதபடி தூர்ந்துபோய்க் கிடக்கின்ற ஒரு நிலையைக் கொண்டிருப்பது காடு. அதன் வழியாகக் கடந்து சென்றவர் அவர். அவரை நினைந்து நாமும் துடித்திருந்தோம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/66&oldid=761869" இலிருந்து மீள்விக்கப்பட்டது