பக்கம்:ஐயை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் பருவத்தில் பிறர்க்கு அவள் விளங்காதவள்;

இம் மூன்று பருவங்களும் பெண்மை என்ற பொன் ளிைழையில் கோத்த மூன்று முத்துகள்! -

இவை ஒவ்வொன்றும் தனித்தனி அழகு வாய்ந்தவை: உறுதி நிறைந்தவை. இவை எந்த ஒர் ஆணிஞலும் விலை மதிப்பிட முடியாதவை.

கற்பனைக் கண்களால் கலைச் சிறகமைத்து அவற்றை நாம்

காண முடிந்தால், !

ஆ! அவற்றின் பொலிவும் வலிவுந்தாம் என்னே!

ஐயை ஒரு பாவியம் மட்டும் அன்று; பேதைப் பெண் ஒருத்தி யின் உள்ள ஒவியம்! அதில் அருவியின் சிலிர் சிலிர்ப்பையும் பார்க்கலாம்; தென்றலின் குளிர்மை யையும் நுகரலாம்; எரிமலையின் சீற்றத்தையும் காணலாம்.

என் இரண்டுமாதச் சிறை வாழ்க்கையின் ஊடே மலர்ந்து

மணம் பரப்பியவள் இந்த ஐயை!

எங்கேனும் ஐயையைப்போன்ற பெண் ஒருத்தியை நீங்கள் காண நேர்ந்தால், அவள் உள்ளத்தை வாழ்வெலாம் தொழுது போற்றிக் கொண்டிருங்கள். அந்தப் பெண்மை உள்ளத்திற்கு இந்த வானமும் எளியது; புடவியும சிறியது! - .

எங்கோ மலர்ந்து எவர் கண்களுக்கும் படாமல் மனம் பரப்பிக் கொண்டிருக்கும் அத்தகைய உள்ளங்களால் தான் இவ்வுலகம் தன் நிலை பிறழாது சுழன்று கொண்டுள்ளது.

ஐயையை முழுவதும் உணர்ந்தால் நீங்களும் அவ்வாறு தான் கருதுவீர்கள்! அதன்பின் உங்கள் உள்ளத்தில் ஒரு புதிய ஒளி பிறக்கும்; ஒரு புதிய வழி விளங்கும.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/12&oldid=1273469" இலிருந்து மீள்விக்கப்பட்டது