பக்கம்:ஐயை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

அறிவையே குளிகையா ஆக்கிக் கொடுப்பினும் செறிவிலே போக்குவ தல்லால் செரித்ததால் நல்லறி வுறப்பெறும் நாட்டமின் றில்லை; இல்லறச் சிறப்பும் எவர்க்குமிங் கில்லை! 85 நல்லறம் பேசுதல் தான்று கொள்ளுதல்! பொல்லா தனவே பொலிவொடு திகழும்! எனவே; எவரும் எங்குமெப் பொழுதும் மனம்வே முகச் சொல்வே ருக வினைகளோ அவற்றினும் வேறுவே. ருகப் 90 புனேவுற வாழுமிப் பொல்லாக் காலத்துக்

கற்பதும் அதுதக நிற்பதும் கனவே! முற்கா லத்து, அது முடிந்த தாகலாம்!

இக்கா லத்து,அ.து ஏலா வெறுமொழி! சுக்கோ மிளகோ சுவடியில் கற்றுப் 95 பொய்யோ புனைவோ புதுமையாய்ப் பேசிப், கையோ காலோ கழுத்தோ பிடித்துப் பதவியை வாங்கிப் பணத்தைச் செய்து, மதமத வென,வாய் வயிறே மனமாய், உண்டி கொழுத்தே, ஊர்தியில் வந்து, 100 பெண்டுகள் பலரும், பிள்ளைகள் பலவும், நிறைவுறக் கண்டு, நிலவு தோய் முற்றத்து அறையில் படுத்தே அன்ருடம் உறங்கும் வாழ்வே வாழ்வென. வண்ணித்துப் பேசும் சூழ்வே இன்றைய உலகத்துச் சூழலாம்! H05

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/158&oldid=1273619" இலிருந்து மீள்விக்கப்பட்டது