பக்கம்:ஐயை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

எத்திறத் தாளோ? இவ் விளம் பெண்"-என அனைவரும் வியந்தே அண்ணுந்து நோக்க, 155 புனை விலா ஒவியம் போல ஒருத்தி மேடையில் நின்ருள்! மெய்ம்மறந் தையை,யவ் ஓடைக் குளிர்மலர் உற்று நோக்கி உள்ளம் மகிழ்வுற உயிரவட் பொருந்த - அள்ளும் உணர்வினல் அவள் உரை கேட்பாள்; 160

‘ என்றும் மாரு நிலைகள்’ என்பன.

என்றுமே உயிர்களுக் கின்பம் தருவதும், என்றுமே உயிர்களின் தேவைக் கிருப்பதும், என்றுமே உயிர்கள் விரும்பி ஏற்பதும்எவையோ அவையாய் இருத்தல் வேண்டும்! 165

அன்றைய வாழ்க்கை அமைப்புகள் இன்றிலை; இன்றைய நிலைகள் இனியிலா திருக்கலாம்; உணவுகள் மாறலாம்; உடைகள் மாறலாம்; உணர்வுகள், இடங்கள் காலங்கட் கேற்பப் பற்பல உண்டிகள்; பற்பல சுவைகள்; I70 பற்பல உணவுப் பழக்க வழக்கங்கள்! இருப்பினும் பசியுணர் வென்றும் ஒன்றுதான்! திருப்பம் அதிலே திகழுவ தில்லை! உண்ணும் அவாவின்- உடுத்தும் ஆசையின்எண்ணம் என்றும் இருந்துகொண் டிருக்கும்! | 75 உள்ளத் துணர்வுகள் என்றும் உளவாம்! உண்மையில் உள்ளம் என்றும் உள்ளது!

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/161&oldid=1273622" இலிருந்து மீள்விக்கப்பட்டது