பக்கம்:ஐயை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை 播

தொலைவிலோர் தனிநாய் தொண்டை கிழிய ஊகள யிட்டது! கழுத்துமணி ஒலிக்கக் காளைகள் இராப்புல் அருந்தக் கத்தின! 265 ஐயை பாயலில் அசைவறக் கிடந்தாள்! மெய்தனி நயை கண்ணிர் மிதந்தது!

உலகத் தவளே ஒரு துணை யின்றி அலகிலாத் துயரில் ஆழ்ந்து கிடப்பதாய் எண்ணி நடுங்கிளுள் இறந்த அன்னையின் 270 தண்ணிய முகத்தையும் தந்தையின் முகத்தையும் என்றும் கண்டிலள்! இவளை ஈன்றதும் அன்னே இறந்ததாய் அத்தை உரைத்துளாள்! பின்னே தந்தையும் நோயுறப் பிரிந்தார்! தன்னை அத்தை அன்பினல் தாங்கிள்ை! 275 அத்தையும் பிரிந்தால் ஆர்துணை யென்று முத்தவாய் அரற்றி மொய்குழல் அழுதாள்! உயிரைப் பிசைந்த தீக்கன உறுத்த செயிர்ப்புற வருந்தி உறக்கம் செகுத்தாள்! விடியா இரவை வெட்டி வீழ்த்திடத் 280 துடியாய்த் துடித்தாள்: உள்ளுயிர் துவண்டாள்! காலை மலர்ந்ததும் கனச்சுமை ஒலத்துக் கரைக்க உளமுரு கினளே!

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/29&oldid=1273487" இலிருந்து மீள்விக்கப்பட்டது