பக்கம்:ஐயை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

தேனும் பாலும் தேக்கிப் பிசைந்த ஊனுங் கொள்ளாது உறக்கமும் இன்றி, இனிவரும் நாட்கக்ள எண்ணி எண்ணியே £80 பனியினுங் குளிரினும் வெயிலினும் சாகாது, பிழைத்துக் கொண்ளே பேதை ஏழையின் தழைத்த அன்பினை உணர்விரா?' என்று மடமட என நீர் மல்கிடப் பொழிந்தாள்! கடகட வென்றே கா8ள சிரித் து 485 'நன்றே அறிகுவேன் நான்' என உரைத் தான்! "உண்மையா? அவள் பெயர் உரையுங்கள்' என்னத் "தும்பை” என்றனன் தோகையின் நெஞ்சில் அம்பொன்று வந்தே ஆழப் புதைந்தது வல்லிடி தலைமேல் வந்து வீழ்ந்ததே! 490 எல்லாப் பொருள்களும் இவள் முன் சுழன்றன! நாடி தளர்ந்தது; நாளம் வெடித்தது! ஒடிய குருதி உறைந்து நின்றது! கழிவெள் ளத்துச் சூரு வளியென் விழிசுழன் றிருண்டது ஐயை வீழ்ந்தாள்! 495 காதற் கேங்கிய கன்னி சாதலுங் காளுள் சார்ந்தது துயரே!

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/41&oldid=1273501" இலிருந்து மீள்விக்கப்பட்டது