பக்கம்:ஐயை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை,

வெம்மை நெஞ்சம் நினைத்து வெடித்தது! வெம்பிய உயிரின் விசையெலாங் கூட்டி 'அம்மா! வென்றே அாற்றினுள் ஐயை! 505 'கண்ணே உயிரே கலைவளர் திருவே! என்னே அம்மா!' என்றனள் அத்தை! ஒண்டொடி பேசவும். உள்ளே வந்தான். திண்டோள் செம்மல் தீதிலா மங்கை அத்தை மடிமேல் தலைபுதைத் தழுதாள்! | 5 || 0 அத்தையும் அழுதாள் ஆளனும் அழுதான்!

குடிலிற் சாவொலி குடிகொண் டிருந்தது! துடிதுடித் தந்தத் தோகை அமுததைக் கண்டதும் செம்மல் கண்ணிர் சாய்த்தான்! பெண் மையின் காதற் பெற்றியை வணங்கினன்! 515 ஆயினும் தும்பை எனுமோர் அழகி தூயதன் உளத்தில் முன்பே தோய்ந்ததால் ஐயையின் காதலுக் கணையிட முயன்ருன்! பொய்யிலா அன்பைக் கண்டு போற்றினன்! என்னினும் உளத்தை இரண்டாய்ப் பகுத்துப் 520 பொன்னி னல்லாட்குப் பகுத்திடல் புரையெனக் கண்டான் ஆதலின் காதல் இளம்புரு விண்டு விளக்கிய அன்பினை விலக்கினன்i

29 r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/43&oldid=1273503" இலிருந்து மீள்விக்கப்பட்டது