பக்கம்:ஐயை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்.

உலகியல் நெறியால் உரவோர் கண்ட அலகிலா ஒழுங்கின் அடிப்படை உண்மை மரபுப் பயிற்சியால் மங்கைய ரிடத்து 799 விரவிக் கிடப்பினும், செயலால் விளங்கினும் அதனுள் புதைத்த ஆகத் தொளியுரு இதுநாள் வரையும் புலப்படா திருந்தது! தண்ணெனும் காதலே தணலா மாறி, விண்ணினும் விரிவா விளங்கும் தன்மையை 795 ஐயையின் வாய்மொழி அவட்குணர்த் திற்று; செய்யருந் திருவிள்ை செம்மல்மேற் செலுத்திய மெய்யருங் காதல் மேனியைக் காய்ச்சினும் வெய்ய புழுவென அவளுளம் வெதும்பினும் அதுவே தண்ணென அவுட்குக் குளிர்ந்தது! 800 அதுவே அன்பின் அகப்புலம் கண்டது! எனவே ஐ யையை இதுவரை பேணு மனவுணர் வாலே மதித்துப் போற்றினுள்! தூய்மையோள் உளத்துத் தோன்றிச் சுடர்விடும் வாய்மைக் காதலை வணங்கவும் செய்தாள். 805 தொட்டுப் பயிலாத் தோகையி னிடத்து மொட்டுப் போல முகிழ்த்த அன்பே காதற் பயனுய்க் கனிந்தது கண்டாள்! ஆதலால் ஐயையின் அன்பைப் போற்றிள்ை! எத்தகைப் புறத்துயர் வரினும், ஏற்றமும் 810 முற்றும் பெற்ற அன்பின் முழுமையால் அகத்துயர் படாமல் இன்பமே அடைவதும் அகத்தொளி பெறுவதும் ஐயையாற் கண்டாள்! புறத்தொடர்பு அறினும் அகத்தொடர் புற்றதால் அறத்தின் அமைதியை அவளிடம் உணர்ந்தாள்! 815

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/59&oldid=1273520" இலிருந்து மீள்விக்கப்பட்டது