பக்கம்:ஐயை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-இரண்டாம் பகுதி முன் னுரை

கடந்த 5-2-76 முதல் 26-1-77 வரை தில்லியரசின் அடக்கு முறை ஆளுமைக் கட்டிலில் அப்பொழுதிருந்த இருபதாம் நூற் ருண்டின் தன் மூப்பதிகார வெறியின் மொத்த உருவமான இந்திராகாந்தியின் தடுப்புநிலை(மிசா)ச் சட்டத்தின் பிடியில் சிக்கிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். என்னைச் சிறை வைத்திருந்தது சட்டப்படி சரியில்லையோ, சரியோ எனக்குக் கிடைத்த முழு ஒய்வென்று கருதி, அச்சிறைவைப்பை முழு நிறை வுடன் ஏற்று ஒரு நொடிப்பொழுதும் வீணுக்காமல், பாடல்கள் பல எழுதியும், பற்பல நூல்களைப் படித்தும், திருக்குறள் வகுப் பெடுத்தும், ஐந்தாண்டுத்திட்ட திருக்குறள் மெய்ப்பொருளுரைக் காகப் பல அரிய நூல்களை ஆய்ந்தும் அவ் வோராண்டுப் பொழு தைக் கழித்தேன். சிறையதிகாரிகளும் என் நூலாய்வுக்கும், நூலுருவாக்கத்திற்கும் உ த வி ய ர க த் தனியறை அமைத்துக் கொடுத்தும் வேண்டிய பல நூல்களைத் தருவித்துக் கொடுத்தும் பேருதவி செய்தனர். அக்கால் 31-3-76 தொடங்கி 24-4-76-க்குள் ஐயையின் அவ்விரண்டாம் பகுதியினே எழுதி முடித்தேன். ஐயையின் முதல் பகுதி 1965 -இல் வேலூர்ச்சிறையில் உருவானது. சென்னேச் சிறையில் உள்ள நேரத்தில், புதினிக்குன்றில் செம்மலின் வரவுக் காக ஐயை நீண்ட நெடுங்காலம் காத்திருப்பது போன்ற ஒருணர்வு என் உள்ளத்தில் நெடுந்துயரைச் செய்தது. அவளுக் குச் செம்மலின் மறைவை உணர்த்தி, அவளைத் தொடர்ந்து வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கவைத்து அவளுக்கொரு முடிவை உண்டாக்கிக் கொடுக்க விழைந்தது என் அன்புள்ளம். ஏற்கனவே அன்பர்கள் பலரும் அவள் முடிவு பற்றி ஆற்ருத நெஞ்சின்சாய் அவள் அவலத்தை என்பால் கூறி வருந்திய நினைவுகளும் என் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தன.

எனவே அவளின் முடியாக் கதையை முடித்து வைக்க விழைந்தது என் கற்பனை உள்ளம். ஒய்வான சில பகற்பொழுதுகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/8&oldid=1273465" இலிருந்து மீள்விக்கப்பட்டது