பக்கம்:ஐயை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

இடிந்திருந்த குடிலகற்றி

எழில்மனையைக் கட்டி இல் புகுமோர் ஏழையைப்போல்

இறுமாந்து நின்றே, 'விடிந்ததத்தான்; தெரியவில்லை;

விருந்துசெய்ய வேண்டும்! வெந்நீர்வைத் திருக்கின்றேன்;

குளித்திருங்கள்” என்ருள்! A 2

ஐயைக்கு நிறைமகிழ்ச்சி!

கண் தெரிய வில்லை! அடுப்படியில் பெருவேலை!

அறுத்துவந்தாள் காய்கள்! கையறுத்துக் கொண்டாள்,அக்

காயரியும் போது! கடுகையள்ளி உப்பென்று

'களுக்கென,த கைத்தாள்! மெய்யுடையைச் சரிசெய்தாள்:

நூறுமுறை மேன்மேல் மேலாடை நழுவிவிழ

எடுத்தெடுத்துப் போட்டாள் பையனிடம் போவதுபோல்

பலமுறையும் செம்மல் பக்கம்போய் நின்று,அவனைப்

பார்த்துமகிழ் வுற்ருள்! Ꮋ 3

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/93&oldid=1273554" இலிருந்து மீள்விக்கப்பட்டது