பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 சிருகருக்கல் பருங்கருக்கல் சீரறிந்து போடுவாரும் உத்திரங்கள் போடுவாரும் உகமையுடன் பேரிகையும் சித்திரத்தால் தூண் நிறுத்தி திண்ணையடி சேர்ப்பாரும் தட்டொடு முத்த வெளியாம் தாக்குடைய வாசல்களும் எட்டு திக்கும் கதவும்.யிடைத் கட்டரை தொட்டி கட்டும் ஏழரங்கு மாளிகையாம் எல்லையில்லாச் சன்னல்களாம் சித்தமுடன் பள்ளி யறையும் தேவாரப் புரையுங்கட்டி ஒலேக்கால் மண்டபமும் ஒழுகாத பந்தல்களும், ஏலங் குழலார் சேவிக்கவே ஏகாந்த மண்ட்பமும் சீராக மரங்களெல்லாஞ் சித்திரங்கள் பல குறிப்பார் நீராவி வெட்டுவாரும் நிரைகல்லுக் கட்டுவாரும் கோடாத மன்னவர்க்குக் குளிக்கப் புரை கட்டுவாரும் தாடாளன் தம்பிமார்க்கத் தனித்தனியே கோவில்க் காலும் சற்றுமொரு குற்றம் வைத்து விட்டுப் போனபோதே குற்ற மற்ற பாண்டியர்கள் கூடியே வீற்றிருந்து பாவிக்குந் தம்பிமாரும் பதினெட்டு மந்திரிமாரும் 2333 நகரம் அமைத்தல் கோவில்க்கால் தனை வளையக் கோட்புடனே வீடுகட்டி 2340 ஆனைப்பந்தி குதிரைப்பந்தி அழகாகக் கட்டுவாராம். சேனை தலைவர் களெல்லாம் தெருத் தெருவாய் வீடுகட்டி பார்ப்பார் துலுக்கர்களும் பரதேசி ராகுத்தன்மார் மெய்ப்புடைய தங்களுக்கு வெவ்வேறே வீடுகட்டி இரண்டருகுங் கடைத் தெருவும் மிக்க கூளைப்பாளை அட்ட திக்குங் கடைத் தெருவும் ஆனதொரு வீதிகளும் பட்டணமா ஊரது தான் பதினெட்டுச் சாதிகளும் கோட்டை தனக் கொரு புறமாய் குடைதிசை மூலையிலேயே தீட்டி விடும் வேல் விழியாள் செம்படர்ந்த முலைமடவாள் 2329 தேவாரப் புரை-பூசை அறை புரை- அறை (குமரி மாவட்ட வழக்கு) 23.33-நீராவி-ஊருணி 2335-தாடாளன்-வீரன் 23.11-2336 கோவில் கட்டிய பகுதிகள் முறை. 2336 சற்றுமொரு குற்றம் வைத்து-பூரணமாக இல்லாமல் ஒரு குறை வேண்டுமென்று விட்டு (திருஷ்டிபரிகாரம்) நம்பிக்கை. 2338-2348 நகர அமைப்பு முறை விளங்கும். (Town planning)