பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

விரட்டினான், ஶ்ரீவல்லபன் விஜயநகர மன்னன் அச்சுதராயனுக்கு உதவிகோரித் தூது அனுப்பினான். அவன் தனது தளபதி சின்ன திருமலையை அனுப்பி வைத்தான். சின்ன திருமலையும் பாண்டியனும் தாமிரவருணிப் போரில் பூதலவீரனைத் தோற்கடித்தனர். இவ்வுதவிக்காக ஶ்ரீவல்லபன் தனது மகளை அச்சுதராயனுக்கு மணம் செய்வித்து அளித்தான்.

இப்போர் பாண்டியரை எதிர்த்துக் கன்னடியர் நடத்திய போரல்ல. அவர்களது அரசு நிலையிட உதவிக்கு வந்த போராகும். மேலும் இவ்விரு அரச பரம்பரைகளும் மண உறவினல் தொடர்பு பெற்றன. தாமிரவருணிப்போர் 1532-ல் நிகழ்ந்தது.

கன்னடியர் படையெடுப்பு

5. வித்தலராயன்

1544-ல் மறுபடியும் விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள் கலகக்கொடி உயர்த்தினர். விஜய நகர மன்னன் சதாசிவராயன் தனது உறவினனும் தளபதியுமான வித்தலராயனை படையோடு அனுப்பினான். அப்பொழுது திருவனந்தபுரம் அரசனும், கயத்தாற்றில் ஆண்டுவந்த பாண்டியனும் ஒப்பந்தம் செய்து கொண்டு தென்காசி விஜயநகரோடு நேச உறவுடையதாக இருந்தது. இவர்களிருவரையும் கலகக்காரர் களாகக் கருதி வித்தலராயன் அவர்களை ஒடுக்க தெற்கே வந்தான். கயத்தாற்றுப் போரில் வெட்டும் பெருமாள் பாண்டியன் தோற்று திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனிடம் தஞ்சம் புகுந்தான்.

வித்தவராயனோடு உடன் வந்த சின்ன திருமலை உன்னி கேரள வர்மனோடு போராடத் திருவனந்தபுரம் நோக்கிப் படைகொண்டு சென்ருன். உன்னி கேரளவர்மன் சரணடைந்தான். வெட்டும் பெருமாள் அங்கிருந்து தப்பியோடி மறுபடியும் கயத்தாற்றுக்குத் திரும்பி போர் செய்தான்.

வெட்டும் பெருமாள்

அவன் தோல்வியுற்றுச் சிறைப்பட்டான். கதைப் பாடல் வெட்டும் பெருமாள் ராஜாவும் வெங்கலராசனும் போரிட்டதாகக் கூறுகிறது. கன்னடியனை வெங்கலராசனே, விஜயநகர் தளபதி வித்தலராயன் என்று நாம் உறுதியாக கூறலாம். இதற்குக் கல்