பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


குலசேகரன் பிறப்பு

குலசேகரனும் அவனுடைய தம்பியரும் பிறந்த வரலாறு இக்கதையின் முதற் பகுதியில் கூறப்படுகிறது. இக்கதை சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் குலசேகர பாண்டியன் முதலிய பிற்காலப் பாண்டியர்கள் தமிழகம் முழுவதும் ஆட்சியைப் பரப்பி புகழ் பெற்று வாழ்ந்த காலத்திற்கு அண்மையில் தோன்றியிருத்தல் வேண்டும். சோழர் ஆதிக்க காலத்தில் வலிமையிழந்து சிற்றரசர்களாக வாழ்ந்த பாண்டியர்கள் பதின்மூன்ரும் நூற்ருண்டில் புதுவாழ்வு பெற்றனர். ஒரு நூற்றாண்டு பெரு வாழ்வு வாழ்ந்தபின் அவர்களது தலைநகரான மதுரையை மாலிக் காபூர், மலுக்குநேமி என்ற டில்லி தளகர்த்தர்கள் கொள்ளையிட்டனர். அதன் பிறகு டில்லி மன்னர்களது பிரதிநிதிகளாக மதுரையில் சுல்தான் ஆட்சியை மலுக்குநேமி நிறுவினன். இவ்வாட்சி சுமார் 49 ஆண்டு கள் நடை பெற்றது. இக் காலத்தில் வலிமை குன்றிய பாண்டியர்கள் தென்காசிக்குச் சென்று அங்கிருந்து பழைய பாண்டிய ராஜ்யத்தின் ஒரு பகுதியை ஆண்டுவந்தனர். அதன் பின் பல கிளைகளாகப் பிரிந்து பல சிற்றரசுகளை நிறுவினர். இறுதியில் அவர்களுக்குள்ளும், வேற்றரசர்களுக்குள்ளும் போர்கள் நிகழ்ந்தன. புகழ் குன்றிய இந்நிலையில் அவர்களும், மக்களும் புகழ் பெற்று வாழ்ந்த முந்திய காலத்தை எண்ணிப் பார்த்து அப் பெருமையை மீண்டும் பெற ஆர்வம் கொண்டனர். இக் கதைப் பாடலே அந்த ஆர்வத்தின் காரணமாகப் பாடப்பட்டதுதான். இந்த ஆர்வம் குலசேகர பாண்டியனது பிறப்பைப் பற்றிக் கூறும் இடத்தில் அவனைப் பெற அவன் தாய் இயற்றிய தவங்களே வருணித்துக் கூறுவதற்குக் காரணம், குலசேகரனப் போன்ற ஒருவன் தோன்றி மங்கிய புகழை மீண்டும் வளரச் செய்ய வேண்டுமென்ற ஆர்வமே. இதுவே குலசேகரன் பிறப்பைப் பெரிதும் வருணித்துக் கூறு வதற்குக் காரணமாகும்.

குழந்தை பிறப்பதற்காக தாய் தந்தையர் செய்யும் தானங்கள் இயற்றும் தவங்கள் முதலியவைபற்றி எல்லா நாட்டுக் கதைப் பாடல்களும் கூறும், (ஒவ்வொரு நாட்டுக் கதைப் பாடலிலும் பாடல் தல்வனது பிறப்புக்கு முன் அவனது தாய் தந்தையர் செய்த தானமும் தவமும் கூறப்படும்.) பெற்றோரின் நல்வினைப் பயனாகக் கதைத் தலைவன் பிறந்ததாகக் கதைப் பாடல்களும் காப்பியங்களும் கூறும். இது உலக முழுவதிலும் காணப்படும் மரபாகும், குலசேகரனும் அவனுடைய தம்பிமார்களும்