பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

னால் விஜயநகர ஆட்சி தமிழ் நாட்டிலும் முழுவதும் ஏற்பட்டு விட்டதை வள்ளியூர் கோட்டையின் அழிவும், பஞ்சபாண்டியர் அழிவும் காட்டுகிறது. அப்படியானால் வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில் இதனை 15ம் நூற்றாண்டின் முடிவென்று கொள்ளலாம். கோட்டை கட்டப்பட்ட காலம், கதை நிகழ்ச்சிகளின் காலத்துக்கு மிக முந்தியது. எனவே கதை நிகழ்ச்சிகளின் காலத்திற்கு முன்பே கோட்டையைப் பற்றிய புனைகதைகள் தோன்றியிருத்தல் வேண்டும். - சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியனது சாசனங்கள் இங்கு பழைய கோயிலில் கிடைப்பதால் இவ்வூரில் அந்தக் காலத்துக்கு அடுத்த காலத்தில் கோட்டை கட்டப்பட்டிருக்கலாம். முயல்நாய்க்கதை பிற்காலத்தில் சேர்க்கப்படிருக்கலாம். இது ஆந்திராவில் தான் அதிகமாகக் காணப்படுகிறது. கட்டபொம்முவின் பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டை பற்றியும் இக்கதையுள்ளது. அக்கதையை அவன் முன்னோர்கள் இங்கு கொண்டு வந்திருக்கலாம். கிளைக் கதைகள் கோட்டையினுள் நிகழ்ந்ததாக இரு கிளைக் கதைகள் போருக்கு முன் இடம் பெறுகின்றன. ஒன்று, வீணாதிவீணன் கதை, மற்றொன்று இடைச்சி கதை. இவை ஒரே ஒரு பிரதியில் உள்ளன. இவை தனிக்கதைகளாக இருந்து ஐவர் ராசாக்கள் கதையில் இடம் பெற்று விட்டன. பெரும்பாலான பிரதிகளில் இக்கதைகள் இல்லாததால் இக்கதைப் பாடலில் அவை சேர்க்கப்படவில்லை. வீணாதி வீணன் கதை இக்கோட்டைக்கு வந்த ஒரு ஏழை வேளாளன் வாழமுடியாமல் தவித்துப் பின் தடியெடுத்தவன் தண்டல்காரன்” என்ற நிலைமையிருப்பதைக் கண்டு தானே சில தடிக்காரர்களைச் சேர்த்துக் கொண்டு வரிவசூலித்துப் பணம் சேர்த்ததைக் கூறுகிறது. அரசனுக்கு நாட்டின் ஆட்சியின் ஊழல் நிலையை எடுத்துக்காட்டவே அவன் இவ்வாறு செய்கிறான். அரசன் அழைத்துக் கேட்கும் பொழுது, நியாயமாக உழைத்துச் சம்பாதிக்க வாய்ப்பு இல்லாவிட்டால் இம்மாதிரி நிலைமை தோன்றும் என்று கூறித் தான் சேரிகத்து செல்வத்தை அரசனுக்குக் கொடுத்து விடுகிறான். இக் கிளைக்கதை என்னால் தனியாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கிளைக்கதை இடைச்சி கதை. கோட்டையை கன்னடியன் முற்றுகையிட்ட பொழுது கோட்டையிலுள்ள குளத்திற்குத் தண்ணீர் வருவதைத் தடுக்க முயலுகிறார்கள். குளத்திற்கு ஒரு கள்ள மடையிருப்பதைப் பற்றிக் கேள்விப்படுகிறார்கள். அதையறிய அந்த மடையைப் பற்றி அறிந்தவர்களைத் தேடுகிறார்கள். இக்