பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

வேந்தர் பெருமாளும் கூத்தாட வென்று சமைந்தார்.
தாளம் சுர பேதம் பரதம் பல நாடகங்கள்
330சக்கிலியன் களி ஆண்டு கன்னல்பா முதியன்
கன்னல்பா வென்ன அர்ச்சுனன் பொன்னுருவியும்,
கஞ்ச பாண்டு பரிசை போர், வீரபத்திரன்
மன்னுக்கரசன் சமைந்து கூத்தாடி வரவே
மங்கையர் கண்டு மருண்டு மயங்கி விழுவார்.
மங்கையர் மன்மதன் கூத்தின் சிரமும் காத்து
வன்ன வச்சிரமும் வழியோட்டமும் பலர் காத்தார்.
ஆனைப் பரி துறையாளனை கூட்டிவா என்னுமுன்
ஒட்டனும் கூட்டி வரவே குலசேகரன் கண்டிய தேவரை
வந்து தொழுதார்.
340நாட்டையாள மருவலாரை நற்பீடமிட்டு வெட்ட
நற்பரியேறி படிக்க வேணுமென்றார்.
கேட்டுக்கிளர்ந்து பரித்துறையாடி அனுப்ப
கேடில்லா வீரர் கரத்தின் விதிப்படியாலே
படியாளு மன்னர் பரியேற முகிழ்த்தம்
பார்த்து இலக்கணத்தோடு............
கடிதாக கச்சணியும் நம்பிரான் தன்னை
கட்டி அலங்கரித்து வாருமென்று விட்டார்.

வேறு


விட்ட போது சரணியும் தான் படியதாக
வேழம் பரிகள் நம்பிரான்கள் கண்டு நிற்கும்
350மட்டு மாளிகைக்குள் பூட்டுப் புரை திறந்து
மாணிக்கப் பேரான மருந்து வாயு வதையும்
அட்ட மங்கலம் பகல் விளக்கு வைக்கும்
அஞ்சு வண்ண பஞ்ச கல்யாணியும்

330-340 இளவரசன் கூத்தும், நாடகமும் பார்த்துக் களித்தான். கூத்தும், நாடகமும் ஆடியவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூத்து சக்கிலியர் முதலிய கீழ்ச்சாதியார் ஆடினரென்பது இதனால் தெரிகிறது.
340-41 நாள் முகூர்த்தம் பார்த்து நம்பிரான் என்ற குதிரையை அலங்கரித்துக் கொணர்ந்தார்கள்.
348 சரணி - குதிரை (ஊர்த்)
349 இளவரசனுக்குக் குதிரையேற்றம் கற்பிக்க குலசேகரன் கண்டியத்தேவன் என்பவனே அழைத்து வந்தனர்.
353-54 பஞ்ச கலியாணி, கார்குல்லா குதிரைச் சாதிப் பெயர்கள், தம்பிரான் - ஒரு குதிரையின் பெயர். இதுவே பட்டத்துக்குதிரையாகும்.