பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

சித்தாடை சிகப்பி ஒருத்தி
சிரித் தொழுது தன்மேல் விழ
பத்தாமல் கட்டி நெருக்கத்திலுள்
எல்லாம் பாராட்டி விட்டு விட்டார்.
வெற்றி லைதின்று செறுக்கி ஒருத்தி
780விழுந்தாள் ஒருவன் மேலே
சுத்தி லே களம் பார்த்து அவளுடை
அல்லுன் தோளிலும் கையை வைத்தார்.
தண்டியல் பல்லக்கு மூடாவுக் குள்ளே
தவஞ் செய்தவோர் கள்வன்
எண்டிசை மாதர் மடவாரும்
மெத்த எதிர்த் தெருத் தனிலே
மண்டலம் போட்டு வரதுங்கர் (பாண்டியர்)
மன்மத யானை மீதிலவர்
கண்ட மடவார் கருத்தழிந்தேயிவன்
காமனோ என்பாரும்,
790காமனோ சீவகனோ நளனோ
கொடைக் கன்னனோ என்பாரும்
தர்மந் தருவானோ யின்றைக்கு வந்து
தழுவுவானோ என்பாரும்,
ஊமந்தனைப் போல உரையாட மாட்டாமல்
யொயமா போலொருத்தி
ஒவியம் போல வடிவாள் நுதலாள் ஒத்த
பாண்டியன் தன்னைக் கண்டு
ஆவியும் உண்டி யுடலையுருக்கி
800ஆனை மேல் வந்தத தெல்லாம்
பாவி யே இன்றைக் கிவனோட சென்று
படைக்கிலன் வேந்தன் என்பார்
வேத னைப் பட்டு மடவார் தெருவில்
விழுந்திடுவார் எழுந்திருப்பார்
வாதனையுண் டென்று அன்னே சேர் மகளே நீ
வாடி என்பார்
கால் வளை பாடகம் பீலி
மறந்தா ளொருத்தி அங்கே
வேடிக்கையாக ஒருத்தி ஒடிச் சென்று
810வேந்தனை முன் மறித்தாள்
வேந்த நீ யானை, மேல் வார பவழியும்
வேடிக்கை பார்க்க வந்தோம்

811 வார-வருகிற