பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3

ஆனால் சாதி வரலாறு பற்றிய சில நூல்களில் இக்கதையைப் பற்றிய குறிப்புகள் கிடைத்தன. "மறவர் வரலாறு" என்ற நூலில் பஞ்சபாண்டியர் கதையைப் பற்றி குறித்துள்ளதைப் படித்தேன். அப்பெயருடைய வில்லுப்பாட்டு இருப்பதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார்.

"நாடார் மன்னரும், நாயக்க மன்னதம்" என்ற நூலில் "ஐவர் ராசாக்கள்" கதை என்கிற கதையின் சுருக்கத்தைக் கண்டேன். 'சண்பகராமன் பள்ளு' என்ற புத்தக விளம்பரத்தைப் பார்த்தேன் விளம்பரத்தில் "வில்லுப்பாட்டான் கதை கதை வசனத்தில் எழுதியது" என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த நூல் அச்சான அச்சகத்திற்கு எழுதினேன். அவ்விலாசத்தில் அச்சகமில்லை என்று கடிதம் திரும்பி விட்டது. நாகர்கோவிலில், அச்சக விலாசமிருந்தால் அந்நகரிலுள்ள நண்பர்களுக்கு எழுதினேன். அந்த விலாசத்தில் 20 வருஷங்களுக்கு மேலாகவே ஒரு ஜவுளிக்கடை இருப்பதாகவு, அதற்குமுன் ஒரு வேளை அங்கே அச்சம் இருந்திருக்கலாமென்றும் நண்பர்கள் தெரிவித்தார்கள்.

இச்சமயத்தில் என் நண்பர் நல்லகண்ணு "ஐவர் ராசாக்கள் கதை" என்று முகப்பு வரையப்பட்ட ஏட்டுப் பிரதியொன்றை மிகவும் சிரமப்படுத்துக் கொண்டு யாரிடமோ வாங்கிவந்தார். பழையகாலத்து ஏடு சிற்சில இடங்களில் கரையானும், பூச்சிகளும் அரித்த துவாரங்கள் முழுதும் இரண்டு நாளில் படிந்து முடித்தேன்.

நான் பல வருஷங்களாகத் தேடிக் கொண்டிருந்த கதைப் பாடலின் முதல் பகுதி இது. சுமார் 20 ஏடுகளில் குலசேகரப் பாண்டியன் பிறப்பு வளர்ப்பு மட்டும் வில்லுப்டுப்பாட்டு வடிவத்தில் வரையப்பட்டிருந்தது. கதையாரம்பம் மட்டும்தான் அது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு நண்பர் 'மாலையம்மை கதை' என்றோர் கதையை எனக்கு அனு வைத்தார். மாலையம்மை குலசேகரனின் தாயார். அவள் ஐந்து குழந்தைகள் பெற்ற கதையைத்தான் இப்பாடலும் கொல்கிறது.

கன்னடியன். சண்டையைப்பற்றியும், வீணாதி வீணன் கலகத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. பல ஏட்டுப் பிரதிகளும் அழிந்து விட்டனவோ என்ற் நான் வருந்தினேன். நாட்டுக் கதைப் பாடல்கள் காலத்தால் முந்தியதும் பெரியதும், வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியும், சமூகவாழ்க்கை பற்றியும் நாம் அறியாத புதிய விவரங்கள் அளிப்பதுமான இக்கதை கிடைக்காமலே போய் விடுமோ என்று எண்ணினேன்.

ஒருநாள் தற்செயலாக எனது பழைய தமிழாசிரியாரும் இலக்கிய ரசிகரும் திரு. அருணசன் கவுண்டர் அவர்களைக் கண்டு