பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

980நேரியக் காரர்கள் சூழ்ந்து வர
கூட்டக் குதிரைகளும்
கொத்தளக் காரர்களும்
சேட்ட முள்ள ஈட்டிக்காரர்
சேர்வைகாரர் செருமிவர
ஆங்கே யிருந்த குல சேகரர்தான்.
அழகிய சொக்க நாதரை அடி வணங்கி
பங்கயத்தாள் உமை அங்கயற் கண்ணி தன்
பாதத்தைப் போற்றியே காணிக்கையிட்டு
சிங்கன் திறல் தம்பி மார்க்கும்
990சேன பரி காலாளும் மந்திரி மாரும்
கங்கைச் சடையனார் பதம் போற்றி
காஞ்சி புரந்தனிலே போகவெண்ணி
போக வென்ற நல் முகிழ்த்தங் குறித்து
புரவி கரி பரி முன்னே நடக்க
தோகை மடவார் குரவை முழங்க
தோரணம் கட்டுவார் பூரணம் வைப்பார்.
வாகான வீதி கடந்தே நடந்து
வையையும் விட்டு வடகரை கண்டார்.
ஆகந் தெளிந்து அழகரைப் போற்றி
1000அரசன் குலசேகரப் பெருமாளும்
கொலையான சூழ கொடிகள் நெருங்க
குன்றாத முத்தின் குடைகள் பிடிக்க
மலையான் நாடு தெலுங்கரும் வலையரும்
மத்துள்ள கொத்தளக் குடியில் மறவரும்
சிலையானர் எங்கும் பரந்தே நெருங்க
சித்துார் கணவாய் தனைக் கடந்தார ம்
தலைவர்கள் வாழ்த்த பலகீத மோத
நடந்தார் மலையாங்குறிஞ்சி கடந்தார்
கடந்தார் குழல் சங்கு தாளம் நமரி
1010கைத்தாள் முழங்க தப்புடன் இடக்கை
அடர்ந்தவில் சின்னம், வீராணம் கொட்ட
அட்ட திசை எட்டதிர மத்தளம் முழங்க
படந்தேறு தென் கடல்துடர்ந்தேறும் அவரைப்போல
பக்தியுடன் மாமுண்டி நத்தம் கடந்து

984 செருமி-நெருங்கி
1004 மத்துள்ள-மற்றுமுள்ள
கொத்தளக்குடி மறவர்-கொண்டையன் கோட்டை மறவர்