உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

101

1,500 கிராம் அரிசி போதவில்லை என்றும், அதை அதிகரிக்க வேண்டுமென்றும் கூறினார்கள். அதை அரசு உடனடியாக ஏற்று வயது வந்தவர்களுக்கு 1,800 கிராமும், சிறுவர்களுக்கு 900 கிராமும் வழங்க அதற்கான ஆணையைப் பிறப்பித்தது ஆகவே, எடுத்துச் சொல்லும் விஷயம் எதுவும் புறக்கணிக்கப் படவில்லை என்பதற்காகத்தான் இவைகளைக் கோடிட்டுக் காட்டினேன்.

அடுத்து, கார்டுகள் வழங்கப்படுவதில் சீர்திருத்தம் தேவை. கார்டுகள் வழங்கப்படவில்லை என்ற கருத்து சொல்லப்பட்டது. உங்களுக்கு ஒரு விவரத்தைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அங்கு ஜனக்கணக்கெடுப்புப்படி மக்கள் தொகை 121/2 இலட்சம் பேர். ஆனால் வழங்கப்பட்ட அட்டைகள்படி மக்கள் தொகை 1334 இலட்சம் பேர். 121/2 இலட்சம் பேர் 133/4 இலட்சம் கார்டுகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, அவைகளில் என்னென்ன தவறுகள் ஏற்பட்டிருக் கின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு இப்பொழுது அந்தக் கார்டுகளில் கிட்டத்தட்ட 10,000 முதல் 12,000 கார்டுகள் வரையில் நீக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து முயற்சி செய்யப் படுகிறது. 2,000 கிராம் அரிசி கொடுக்கப் பட்டிருக்கிறது என்றாலும், சில இடங்களில் தரப்பட வில்லை, அதற்கு அதிகாரிகளே காரணம் என்றாலும் அவைகளெல்லாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயமே அல்லாமல் போராட் டத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று நான் கருதவில்லை. ஏனென்றால் பலமுறை பேசிப்பேசி, நான் பழைய காங்கிரசை மட்டும் சொல்லவில்லை, அ.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சி, எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் என்னிடத்திலேயும், உணவு அமைச்சரிடத்திலேயும், அதிகாரி களிடத்திலேயும் பேசியிருக்கிறார்கள். அந்த வகையில் பேசித் தீர்க்கும் ஒரு பிரச்சினையாக நான் இதைக் கருதுகிறேன்.

திடீரென்று போராட்டம் தொடங்கியது. அம்மையார் அவர்கள் சொன்னார்கள், சிலரைப் பிடித்து விட்டு விடு கிறார்கள், சிலர் உள்ளேயே வைக்கப்படுகிறார்கள் என்று சொன்னார்கள். திரு.பொன்னப்ப நாடார் அவர்கள் அப்படி