உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

105

பெயரில் 85 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்

இதற்கு ஒரு போராட்டம் தேவையா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொடர்ந்து பேச்சு வார்த்தை மூலமாக முடிவெடுத்து 1,400 கிராம் அரிசி இன்றைக்கு 2,000 கிராம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மீண்டும் பேச்சு வார்த்தைகள் மூலமாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாதா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

கள்ளக் கடத்தல்காரர்களைப் பிடிக்கவேண்டுமென்று தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் மணலி அவர்கள் கூறினார்கள். அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வேன்- மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டிலேயே நான் திட்ட வட்டமாக அறிவித்தேன். உணவுப்பொருள் கடத்தல்காரர்கள் மீது பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும். அதற் கான வழிவகைகளை ஆராய வேண்டுமென்று சொன்னேன். அதற்கேற்ப கோவை மாவட்டத்தில் 13 பதுக்கல்காரர்கள் இன்றைக்குச் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள். என்பதை இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அது மாத்திரமல்ல. நேற்றயதினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று பேர் கடத்தல்காரர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்வேன். இது பதினாறோடு நின்றுவிடாது. து இன்னும் யார் யார் கடத்தல்காரர்களோ அவர்களையெல்லாம் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பிடிக்க எல்லா முயற்சிகளையும் காவல் துறையினர் நிச்சயமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்பதை நான் அறிவித்து அங்கிருக்கும் குறைபாட்டை எடுத்துச்சொல்லி நிவர்த்திக்கச் சட்டமன்றம் கூடியிருக்கும் இந்த நேரத்தில் இந்த அரசோடு கலந்துபேச வாய்ப்பு இருக்கும் காரணத்தால் நிவர்த்தித்துக் கொள்ள முடியும் என்று கூறி, இதிலே ஆற அமர உட்கார்ந்து பேசித் தீர்த்துக்