உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

113

உரை : 20

இராமருக்கு எதிர்ப்பு

நாள் : 21.12.1974

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, வருகின்ற 25-ம் தேதியன்று திராவிடக் கழகத்தினர் பெரியார் திடலில் இராமர், சீதை, இலக்குமணர் ஆகியோர் களுடைய உருவங்களுக்கு தீயிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பை ஒட்டி அம்மையார் அவர்கள் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து அதன்பேரில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள். அவர்களே, குறிப்பிட்டார்கள், இன்று நேற்று அல்ல, திராவிடக் கழகத்தினர் பல ஆண்டு காலமாகவே இப்படிப்பட்ட செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று. 1953-ம் ஆண்டு இராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் பெரியார் அவர்கள், இன்றைக்கு அறிவித்திருப்பதைப் போல ஒரு இடத்தில் அல்ல, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று அறிவித்திருப்பதைப்போல தனிப்பட்ட ஒரு இடத்திற்குள்ளே அல்ல, பகிரங்கமாக வீதிகளிலும், தெருக்களிலும் பிள்ளையார் சிலையை உடைப்பது என்று திட்டமிட்டு, அப்படி சிலைகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உடைக்கப்பட்டன. அப்போது இராஜாஜி அவர்கள் அதுபற்றி எந்தவிதமான நடவடிக்கையும் சட்டப்படி எடுக்கவில்லை. அப்படி சிலைகளை உடைத்த இடங்களிலும் யாரும் உடைத்த காரணத்திற்காக கைது செய்யப்படவும் இல்லை. அவர்கள் அந்தப் பிரச்சினையை அலட்சியப்படுத்துவதுதான் சிறந்தது என்ற வகையில் ஒரு கொள்கையை வகுத்து தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்காமலேயே விட்டு விட்டார்கள்.

5-க.ச.உ.(ஒ.க.)