கலைஞரின் சட்டமன்ற உரைகள்
115
பிரதமரின் அறிவுரை சிலாக்கியமான அறிவுரைதான். ஆனால் இராவண லீலா நடத்துபவர்களுக்கு மாத்திரம் பொருந்துகிற அறிவுரை அல்ல, இராம லீலா நடத்துகிறவர்களுக்கும் சேர்த்துத் தான் இந்த அறிவுரை பொருந்தும் என்பதனை நாம் மறந்துவிட இயலாது. இராவணன் ஒரு திராவிடன், தமிழன் என்ற அளவிலே வரலாறு இருக்கிறது.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய உலக சரித்திரம் என்ற நூலில் அவர் தன்னுடைய மகளுக்கு எழுதிய கடிதத்தில், பிரியதரிசினி என்ற தலைப்பிட்டு எழுதிய கடிதத்தில் இராமாயணம் அரிய திராவிட போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு நாம் ஏற்றுக்கொண்டிருக்கிற இராமன் கடவுளா அல்லது ஒரு கதாபாத்திரமா என்கின்ற சர்ச்சை முடிந்தபாடில்லை. வால்மீகி எழுதிய இராமன் கடவுளாக சித்தரிக்கப்படவில்லை. இன்னும் தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் கம்பன் இராமனை ஒரு கதாபாத்திரமாகத்தான் உருவாக்கியிருக்கிறான். இந்த ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் இராவணனை அங்கே கொளுத்துவதன் மூலமாக இராவணனிடம் அன்பு கொண்டிருக்கிற ஒரு சாராரை பகுத்தறிவாளர்களை அது புண்படுத்துகிறது என்பதனால் பல ஆண்டுகள் வேண்டுகோள் விடுத்தும், இராம லீலா தொடர்வதன் காரணமாக இராவண லீலா நடத்தும் முயற்சியை இவர்கள் இங்கே மேற்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டதன் மூலம் எங்களுடைய வெறுப்பை முழு அளவில் காட்டிவிட்டோம் என்பதனை திராவிடக் கழகம் உணர்த்திவிட்டது. இந்த உணர்வுகளை இந்த உருவங்களைக் கொளுத்தித்தான் காட்டவேண்டும் என்பதல்ல. இப்படிப்பட்ட எதிர்ப்பு தமிழகத்தில் உருவாகியிருக்கிறது என்பதைக் கருதி, வடபுலத்தில் நடைபெறுகிற இராம லீலாவை அடுத்த ஆண்டிலாவது நிறுத்துவதற்கு மத்தியில் உள்ளவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்க