உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

51

கட்டளைகளை

அனுப்புமாறு

சென்னை,

காவல்துறை

இன்ஸ்பெக்டர் ஜெனரல் கேட்டுக்கொள்ளப்பட்டார். அச்சுறுத்திய வண்ணம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தொண்டர்களின் நிலப்பறிக் கிளர்ச்சி நடைபெறுமென்று அடுத்து அரசுக்குத் தெரியவந்தது.

நிலப்பறிக் கிளர்ச்சியில் கலந்துகொள்ள முயற்சிகள் எடுத்த நபர்கள் இ. பி. கோ. சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பல குற்றங்கள் செய்யக் கூட்டு முயற்சிகள் எடுத்ததை அடிப்படையாக வைத்து மாநில முழுதும் மேற்படி குற்றங்களுக்காகவும், தடையுத்தரவை மீறியதற்காகவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன.

ஆயினும் கைது செய்யப்பட்ட நாளும், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்தல் நாளும் ஒருசேர வந்தமையால் தேர்தலில் கலந்துகொள்ள விரும்புவோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் மேற்கொள்ளும் நிலப்பறிக் கிளர்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற உறுதிமொழி எழுதிக் கொடுத்தால் அவர்கள் விடுவிக்கப்படலாமென அரசு ஆணையிட்டது. அதற்கிணங்க ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக இருக்கக் கூடியவர்களும் ஓட்டளிக்க வேண்டிய நிலைமையில் உள்ளவர்களும் அரசாங்கத்தின் ஆணையை ஏற்றுக்கொண்டு எழுதிக்கொடுத்தார்கள். அவர்கள் அத்தனைபேர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆகவே கைது செய்யப்பட்ட காரணத்தினால் வேட்பாளராக நிற்கக்கூடிய தகுதியையோ உரிமையையோ ஜனநாயகத்திற்குப் புறம்பாக இழக்கின்ற நிலைமையோ ஏற்படவில்லை என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். மேலும் அவர்கள் போட்டியிட்ட இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆகவே கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் வைக்கப்பட்ட காரணத்தினால் ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் கலந்துகொள்வது தடைப்படுத்தப்படவில்லை என்பதை நான் தந்திருக்கிற இந்த விளக்கங்களின் மூலமாக நீங்கள் அறிவீர்கள்.

மேலும், கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு சிறைச் சாலைகளில் எவ்வளவு வசதிகள் அளிக்க முடியுமோ அந்த