உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

67

இந்தக் கொடியைப்பற்றிய பிரச்சினை டெல்லி நாடாளு மன்றத்திலேயும், மாநிலங்களவையிலேயும் வந்த நேரத்தில், இந்தியப் பிரதம மந்திரி திருமதி. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்திய தேசியக்கொடிக்கோ அல்லது இந்திய தேசிய கீதத்திற்கோ எந்தவிதமான இன்னலும் வருவதை இந்த அரசு பார்த்துக் கொண்டிருக்காது, நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்முடைய பிரதம மந்திரி அவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் அப்பொழுதே சொன்னேன். பிரதம மந்திரி அவர்கள் கூறியதை எழுத்திற்கு எழுத்து அப்படியே வரவேற்கிறேன் என்று.

மாநில சுயாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநிலத்திற்கென்ற ஒரு தனிக்கொடி என்று கேட்கிறோமே தவிர, பிரிவினை கோஷம் எள்ளளவும் இல்லை, துளியளவும் இல்லை என்று சொல்லிக்கொண்டு, தமிழரசுக் கழகத் தலைவரவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தீர்மானத்தைப் பொறுத்த வரையிலே, இந்தத் தீர்மானத்திற்கு நல்ல வடிவம் கொடுத்து. இந்தத் தீர்மானத்தை இன்னும் விரிவுபடுத்தி, மாநில சுயாட்சி தேவை என்பதற்கான காரணங்கள் என்ன என்பதை விரிவாக விளக்கி இதே மன்றத்திலே ஒரு தீர்மானத்தை வெகு விரைவிலே நாம் கொண்டுவரவேண்டியிருப்பதால் இப்போதைக்கு இதை வலியுறுத்த வேண்டாமென்று நான் கேட்டுக்கொண்டு அமர்கின்றேன்.